பாமக வேட்பாளர் ம.க ஸ்டாலின் மாட்டு வண்டியில் வாக்கு சேகரிப்பு

பாமக வேட்பாளர் ம.க ஸ்டாலின் மாட்டு வண்டியில் வாக்கு சேகரிப்பு

மாட்டு வண்டியில் வாக்கு சேகரித்த பாமக வேட்பாளர்

மயிலாடுதுறை தொகுதி பாமக வேட்பாளர் ம.க ஸ்டாலின் மாட்டு வண்டி ஓட்டி சென்று கும்பகோணம் பகுதியில் வாக்கு சேகரித்தார்.

தேசிய ஜனநாயக கூட்டணியில், மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி பாமக வேட்பாளர் ம க ஸ்டாலின் கும்பகோணம், மயிலாடுதுறை, பாபநாசம், திருவிடைமருதூர், சீர்காழி, பூம்புகார் என ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் தீவிர பரப்புரை பயணம் மேற்கொண்டு பாமக,

பாஜக அமமுக உள்ளிட்ட கூட்டணி கட்சியினருடன் இணைந்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார் அந்த வரிசையில் இன்று தாராசுரம் பகுதியில் பட்டு கைத்தறி நெசவாளர் வீட்டிற்கு சென்று, அவர்களது குறைகளை கேட்டறிந்ததுடன்,

வெற்றி பெற்றவுடன் நெசவாளர்கள் பிரச்சனைகள் முழுமையாக தீர நடவடிக்கை எடுப்பேன் என்றும், மேலும் அந்த நெசவாளருக்கு உதவிடும் வகையில் வேட்பாளர் ம க ஸ்டாலின் பட்டு சேலை நெசவு செய்து உதவினார் தொடர்ந்து தாராசுரம் பகுதியில் ஏராளமான பெண்கள் திரண்டு வேட்பாளர் ஸ்டாலின் மீது உதிரி மலர்கள் தூவியும், ஆர்த்தி எடுத்தும் உற்சாக வரவேற்பளித்தனர் தொடர்ந்து மாநகரின் முக்கிய வீதிகளில வலம் வந்த பாமக வேட்பாளர் கொத்தன் ஒத்தை தெருவில்,

இரட்டை மாட்டு வண்டியில் மண்வெட்டியுடன் ஏறி, மாட்டு வண்டியை ஓட்டிக்கொண்டு வந்து பொது மக்களிடம் நான் உங்களில் ஒருவன், விவசாயி குடும்பத்தை சேர்ந்த நானும் ஒரு விவசாயி தான் என கூறி தனக்கு மாம்பழ சின்னத்தில் வாக்களிக்க வேண்டி கொளுத்தும் வெய்யிலையும் பொருட்படுத்தாமல் தீவிர தேர்தல் பரப்புரை பயணத்தை தொடர்ந்தார்.

Tags

Next Story