பாபநாசம் தாலுகா அலுவலகத்தில் அரசியல் கட்சி ஆலோசனை கூட்டம்

அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்
மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பாபநாசம் சட்டமன்ற தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆதிதிராவிடர் பழங்குடியினர் நல அலுவலருமான முத்துகிருஷ்ணன் தலைமையில் பாபநாசம் தாலுக்கா அலுவலகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் வந்தது தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் கலந்தாலோசனை கூட்டம் நடைபெற்றது.
பாபநாசம் வட்டாட்சியர் மணிகண்டன் தேர்தல் துணை வட்டாட்சியர் விவேகானந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் கூட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை முறையாக கடைப்பிடிப்பதை தொடர்பாக ஆலோசனை வழங்கப்பட்டது.
தேர்தலை சுமூகமாகவும் ஆரோக்கியமாக நடத்துவதற்கு அனைத்து கட்சி பிரதிநிதிகள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். விளம்பர பதாகைகள் புகைப்படங்களை அகற்ற வேண்டும் தேர்தல் மாதிரி நடத்தை விதிமுறைகளை மீறப்படுபவது தொடர்பாக தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் கட்டுப்பாட்டுறைக்கு இலவச அழைப்பு தொலைபேசி எண்ணின் மூலம் தெரிவிக்கலாம் என தேர்தல் அதிகாரிகள் வலியுறுத்தி பேசினார்கள்.
இக்கூட்டத்தில் பாபநாசம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் அனைவரும் கலந்து கொண்டனர்