மதசார்பின்மை மாய்ந்துவிட்டது - ஜவாஹிருல்லா

மதசார்பின்மை மாய்ந்துவிட்டது  - ஜவாஹிருல்லா
தமுமுக மாநிலத் தலைவர் ஜவாஹிருல்லா 
இந்தியாவுடைய மதசார்பின்மைக்கு அழுத்தமான ஒரு தொடக்கத்தை ஜவஹர்லால் நேரு அமைத்து கொடுத்தார். ஆனால் இன்று ஒரு அரசாங்கமே கோவில் கட்டக்கூடிய பணியையும், பிரதமரே கோவிலை திறக்க கூடிய ஒரு நிகழ்வும் நடைபெற்று வருவது இந்தியாவில் அரசியலமைப்புச் சட்டம் சொல்லக்கூடிய மதசார்பின்மை மாய்ந்துவிட்டது என்பதற்கான எடுத்துக்காட்டாக அமைந்திருக்கிறது என தமுமுக மாநிலத் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்தார்.
செங்கல்பட்டு தெற்கு மாவட்ட இடைக்கழிநாடு பகுதியில்,செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சியில் தமுமுக மாநிலத் தலைவர் ஜவாஹிருல்லா பேசுகையில்,ஒன்றிய பாஜக அரசுடைய கொள்கை முற்றிலமாக தோல்வி அடைந்து விட்டது, இலங்கை அரசு நமது இந்திய மீனவர்களை கைது செய்வதை தடுப்பதற்கு பாஜக அரசுக்கு வல்லமை இல்லை என்பதற்கு எடுத்துக்காட்டாக இந்த செயல்கள் அமைந்துள்ளது.உடனடியாக நம்முடைய தமிழ்நாட்டு மீனவர்கள் மீட்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இந்தியா விடுதலை அடைந்த நேரத்தில் அப்பொழுது இருந்த குடியரசுத் தலைவர் சோமநாத புரத்தில் ஒரு கோவிலை அமைப்பதற்காக முன் வந்த போது நம்முடைய முதல் பிரதமர் அவர்கள் கோவில் கட்டுவது அரசாங்கத்துடைய வேலை இல்லை கோவில் கட்டுவதில் தலையிடக்கூடாது கோவில் திறப்பு விழாவிலும் நீங்கள் பங்கு கொள்ளக் கூடாது என்று சொல்லி இந்தியாவுடைய மதசார்பின்மைக்கு அழுத்தமான ஒரு தொடக்கத்தை ஜவஹர்லால் நேரு அவர்கள் செய்தார். ஆனால் இன்று ஒரு அரசாங்கமே கோவில் கட்டக்கூடிய பணியும் பிரதமரே கோவிலை திறக்க கூடிய ஒரு நிகழ்வும் நடைபெற்று வருவது இந்தியாவில் அரசியலமைப்புச் சட்டம் சொல்லக்கூடிய மதசார்பின்மை மாய்ந்துவிட்டது என்பதற்கான எடுத்துக்காட்டாக அமைந்திருக்கிறது என கூறினார்.

Tags

Next Story