எத்தனை வழக்குகள் போட்டாலும் சந்திக்க தயார்: சீமான்

எத்தனை வழக்குகள் போட்டாலும் சந்திக்க தயார்: சீமான்
X

சீமான் அறிக்கை

எத்தனை வழக்குகள் போட்டாலும் சந்திக்க தயார் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் நீலாங்கரை வீட்டிற்கு ஈரோட்டிலிருந்து போலீசார் வந்ததாக தகவல் வெளியானது. இந்நிலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், பெரியாரை பற்றி நான் பேசுகிறேன். பெரியாரை இகழ்ந்து பேசி விட்டதாக கூறுகிறார்கள். பெரியார் பேசியதை எடுத்து பேசுகிறேன். பெரியாரை கொண்டாட நினைப்பவர்கள் புகழ்ந்து பேச வேண்டியது தானே. பெரியார் இதெல்லாம் பேசி இருக்கிறார் என்று நான் சொன்னால் இதெல்லாம் பேசவில்லை என்று மறுக்க வேண்டும். இல்லையென்றால் ஏன் பேசினார் என்று விளக்கம் அளிக்க வேண்டும். அதை விட்டுவிட்டு அவதூறாக பேசக்கூடாது. படம் பொய். பார்த்தது பொய் என்று பேசக்கூடாது. தன்னால் அவர்களுக்கு நெருக்கடி இருப்பதால் தான் இவ்வாறு செய்கிறார்கள். அனைத்து இடங்களுக்கும் என்னை அலைய வைப்பதற்காக சம்மன் வழங்கப்படுகிறது. எத்தனை வழக்குகள் போட்டாலும் சந்திக்க தயார். தகைசால் தமிழர் விருதுக்கு மாற்றாக தகைசால் திராவிடர் விருது கொடுக்க வேண்டியதுதானே என்று அவர் கூறினார்.

Tags

Next Story