பெரியாரை தி.மு.க.வினர் அளவுக்கு யாரும் இழிவுபடுத்தி பேசவில்லை: சீமான்

சீமான் அறிக்கை
பெரியாரை தி.மு.க.வினர் அளவுக்கு யாரும் இழிவுபடுத்தி பேசவில்லை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், நான் பெரியாரை இழிவுபடுத்தவில்லை. பெரியார் என்ன பேசி இருந்தாரோ எழுதியிருந்தாரோ அதை எடுத்து பேசினேன். பெரியாரைப் பற்றி அனைவரும் பேசுகிறார்கள் கனிமொழி உட்பட. பெரியார் என்ன பேசினார்? பெரியார் என்ன எழுதினார் என்று எடுத்துப் பேச உங்களுக்கு யாருக்கும் துணிவு இல்லை. பெரியார் யார் தெரியுமா என்று கேட்கிறீர்கள் தெரியவில்லை சொல்லுங்கள் என்றால் சொல்ல மறுக்கிறீர்கள். பெரியாரை தமிழ்நாட்டில் பேரறிஞர் அண்ணா, கருணாநிதி அளவுக்கு யாராவது இழிவு படுத்தி பேசி உள்ளார்களா? பெரியார் எங்கு சாதி ஒழிப்பை நீக்கினார். பெரியார் பற்றி பேச உங்களுக்கு என்ன தகுதி உள்ளது. பெரியாரை பற்றி பேசும் பெருமக்கள் பெரியார் பேசியது எழுதியதை பேச துணிவில்லை. கனிமொழி பெரியாரிஸ்டா? கடவுள் மறுப்பிலா? சமூக நீதி, பெண்ணிய உரிமை? திமுக கொடுத்த பெண்ணிய உரிமையை பேச முடியுமா? பெரியார் எங்கு சாதி ஒழிப்பு நிலையம் கட்டியுள்ளார்? பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையென்பதை பெண்ணிய உரிமை நிலை நாட்டிய பெரியாரிய பெருமக்களிடம் கேட்க வேண்டும். அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் படிக்கும் மாணவிக்கு பாதுகாப்பு இல்லை. ஈசிஆர் சாலையில் பயணித்த திமுக கட்சி கொடியுடன் வந்த காரில் குறுக்காட்டி தடுத்துள்ளனர். கேட்டால் இடித்துவிட்டது என பொய் பேசுகின்றனர். பொள்ளாச்சியில் கூட்டு பாலியல் வன்கொடுமை விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்த நிலையில் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. தூத்துக்குடி துப்பாக்கி சம்பவத்தில் இரண்டு முறை எம்.பி.யான கனிமொழி என்ன நடவடிக்கை எடுத்தார். அருணா ஜெகதீசன் தாக்கல் செய்த அறிக்கைக்கு நடவடிக்கை என்ன? எம்ஜிஆர் கடைசியில் தனது சொத்தை காது கேளாதோர், வாய் பேச முடியாதவர் அறக்கட்டளைக்கு எழுதி வைத்தார். பெரியார் என்ன செய்தார்? உங்கள் வீட்டில் கை கட்டி நிற்கிறேனா? கூலி என்கிறாய்? 500 ஆயிரம் ரூபாய் கொடுத்து வாக்குகளை பறிக்கிறார் நீதான் கூலி. வாக்கிற்கு பணம் கொடுக்காமல் நின்று காட்டு என்று அவர் கூறினார்.