இந்தி திணிப்பு, தொகுதி மறு சீரமைப்புக்கு எதிராக நாங்கள் தனியாக போராடுவோம்: சீமான்

சீமான் அறிக்கை
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தொகுதி நாம் தமிழர் கட்சி கலந்தாய்வு கூட்டத்தில் கலந்து கொள்ள இன்று ஓசூர் வந்த அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், தமிழ்நாட்டுக்கு நிதி தராமல் வஞ்சிப்பது, மும்மொழி கொள்கை இந்தி திணிப்பு, தொகுதி மறுசீரமைப்பு போன்றவற்றுக்கு எதிராக நாங்கள் தனியாக போராடுவோம். மறு சீரமைப்பு குறித்து பேசுபவர்களை நம்ப முடியாது. இப்போது பேசுவார்கள், பிறகு இதனை விட்டுவிடுவார்கள். இந்தி எதிர்ப்பு என்பது கொள்கை நிலைப்பாடு அல்ல அவ்வப்போது பேசுவார்கள். பிறகு விட்டுவிடுவார்கள். தமிழ்நாட்டுக்கு நிதி தராமல் வஞ்சிப்பது மும்மொழி கொள்கை இந்தி திணிப்பு, தொகுதி மறு சீரமைப்பு போன்றவற்றுக்கு எதிராக நாங்கள் தனியாக போராடுவோம். மத்திய அரசு தேவையில்லாத வேலைகளை செய்து வருகிறது. ஒரே தேர்தல், ஒரே ரேஷன் கார்டு, ஒரே வரி, ஒரே கல்விக்கொள்கை. இந்த மாதிரி வேலைகளை எல்லாம் செய்கிறார்கள். இதனால் நாட்டில் ஒற்றுமை வந்துவிடும் நாடு வளர்ந்து விடும் என்பதெல்லாம் வேடிக்கையான விஷயம். அதேபோலத்தான் தொகுதி மறு சீரமைப்பு என்பது, தேர்தலில் ஏராளமான சீர்திருத்தங்கள் செய்ய வேண்டும். அதில் நிறைய வேலை இருக்கிறது. இந்தியாவும் நைஜீரியாவும் மட்டும்தான் இந்த வாக்கு எந்திரத்தை வைத்துள்ளது. இந்த இரண்டு நாடுகளும் ஊழலில் மோசமான நாடாக உள்ளது. மற்ற உலக நாடுகள் அனைத்தும் வாக்குச்சீட்டை பயன்படுத்தி வருகின்றனர். மைக்ரோ எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை ஜப்பான் தயாரித்து வருகிறது. அந்த நாடே வாக்கு எந்திரத்தை வைத்துக் கொள்வதில்லை. அமெரிக்காவில் மனித கழிவுகளை எந்திரத்தில் அள்ளுகிறார்கள், வாக்கை வாக்கு சீட்டில் போடுகிறார்கள். ஆனால் இந்தியாவில் மனித கழிவுகளை மனிதனை அல்ல வைக்கிறார்கள், எந்திரத்தில் வாக்களிக்கிறார்கள். டிஜிட்டல் என்று கூறிவிட்டு 42 நாட்கள் பாராளுமன்ற தேர்தலில் வாக்கு பெட்டிகள் முடங்கி கிடந்தது. ஒரே நாளில் தேர்தலை நடத்த முடியுமா. அதுபோன்ற மாறுதல்கள் செய்ய வேண்டும். ஒரு நபர் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவதை தவிர்க்க வேண்டும். ஒரு பதவியில் இருக்கும் போது இன்னொரு பதவிக்கு போட்டியிடுவதை தடுக்க வேண்டும். இடைத்தேர்தல்களை நீக்க வேண்டும். அது தேவையில்லாதது. மாறாக இரண்டாவது இடம் பிடித்தவரை வெற்றியாளர் என அறிவிக்க வேண்டும். மீதியுள்ள காலத்தில் மக்கள் பணியாற்ற அவருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும். மத்திய அரசுக்கு, தமிழ்நாடு என்றாலே வெறுப்பாக உள்ளது. காமராஜர், அண்ணா, இவர்களுக்கு பிறகு அரசியல் நேர்மை, தூய்மை இறந்து விட்டது. கருணாநிதி முதல்வரான பிறகு, தமிழகத்தில் தீய அரசியல் ஆட்சி தொடங்கி விட்டது. சென்னை வளசரவாக்கம் போலீசார் வழக்கு சம்மந்தமாக என்னை ஆஜராக கூறினார்கள். அதற்கான விளக்கத்தினை நான் ஏற்கனவே கொடுத்துவிட்டேன். மேலும் அவர்கள் இந்த விளையாட்டை நீடித்து கொண்டே இருக்கிறார்கள். எனவே எனக்கு நேரம் கிடைக்கும் போது விளக்கம் அளிக்கிறேன் என்று கூறிவிட்டேன் என்று அவர் நிருபர்களிடம் கூறினார்.