அண்ணா பல்கலை., விவகாரத்தை வாக்கு வங்கி அரசியலாக்கி விட்டார்கள்: செல்வப்பெருந்தகை

அண்ணா பல்கலை., விவகாரத்தை வாக்கு வங்கி அரசியலாக்கி விட்டார்கள்: செல்வப்பெருந்தகை

செல்வப் பெருந்தகை

அண்ணா பல்கலை., விவகாரத்தை வாக்கு வங்கி அரசியலாக்கி விட்டதாக காங்கிரஸ் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்றைய கூட்டத்தில், அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரம் தொடர்பாக காரசார விவாதம் நடைபெற்று வருகிறது. அப்போது, "தமிழ்நாட்டில் மனுநீதிச் சோழன் ஆட்சி நடைபெற்று வருகிறது. பிரச்சனையை தொலைக்காட்சியில் பார்த்து தெரிந்துக் கொண்டேன் என சொல்லக்கூடியவர் அல்ல முதல்வர் மு.க.ஸ்டாலின் என்று காங்கிரஸ் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை தெரிவித்தார். இவரது கருத்துக்கு அதிமுகவினர் சட்டப்பேரவையில் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். பிறகு, செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, ஞானசேகரனிடம் செல்போனில் பேசியது யார் என்று மத்திய அரசு தான் வெளியிட வேண்டும். செல்போன் அழைப்புகள் தொடர்பான விவரங்கள் மத்திய அரசிடம் உள்ளது. அவர்கள் தான் விவரங்களை வெளியிட வேண்டும். 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில், அதிமுக நிர்வாகி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஒரு விரல் மற்றவரை காட்டினால் மற்ற விரல்கள் உங்களை காட்டும். அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தை வாக்கு வங்கி அரசியலாக்கி விட்டார்கள். பாலியல் வன்கொடுமை விஷயத்தை அரசியலாக்குவது அதைவிட கொடுமை என்று தெரிவித்தார்.

Tags

Next Story