இதுவரை 4 ஆயிரம் மனுக்களுக்குத் தீர்வு ! ஆனையத்தின் தலைவர் தமிழ்வாணன் தகவல் ! சமூகநீதி காக்கும் தமிழக அரசு ! - கிங் நியூஸ் 24x7

அரசன் காலனி
தமிழ்நாடு ஆதிதிராவி டர் ஆணையத்தில் இதுவரை 4 ஆயிரம் மனுக்களுக்கு தீர்வு காணப் பட்டு உள்ளன. இந்த ஆணையத்துக்கு முழு நேர உறுப்பினர் செயலரை நியமிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஆதிதிராவிடர், பழங்குடியினரின் சட்டப்பூர்வமான உரிமைகளை பாதுகாக்கவும், அவர்களது முக்கியமான பிரச்சினைக ளுக்கு தீர்வு காணவும் தன்னாட்சி அதிகாரத்துடன் செயல்படும் வகையில் தமிழ்நாடு ஆதிதிராவிடர், பழங்குடியினர் ஆணையத்தை உருவாக்கி அதற்கு தலைவர் மற்றும் உறுப்பினர் களை நியமித்து கடந்த 2021-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல்-–அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
தற்போது இந்த ஆணையத்தின் தலைவராக ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி தமிழ்வாணன் இருந்து வருகிறார். துணை தலைவராக எழுத்தாளர் இமயம், உறுப்பினர்க ளாக ரேகா பிரியதர்ஷினி, செல்வக்குமார், ஆனந்தராஜா, பொன்தோஸ், இளஞ்செழியன் ஆகியோர் இருந்து வருகின்றனர்.
இந்த ஆணையம் தொடங்கப்பட்டது முதல் தற்போது வரை 5 ஆயிரத்து 191 மனுக்கள் பெறப்பட்டு உள்ளன. இவற்றில் 4 ஆயிரத்து 38 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு உள்ளன என ஆணையத்தின் தலைவர் ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி தமிழ்வாணன் தெரி வித்துள்ளார்.
குறிப்பாக நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் ஊராட்சி ஒன்றிய தொடக் கப்பள்ளி பெயர் பலகையில் பள்ளியின் பெயரோடு இடத்தை குறிப்பிடும் வகை யில் ‘அரிசன காலனி’ என இருந்ததை ‘மல்லசமுத்திரம் ஊராட்சி ஒன்றிய தொடக் கப்பள்ளி கிழக்கு’ என பெயர் மாற்ற ஆணையம் அரசுக்கு பரிந்துரைத்தது.
இந்தப் பரிந்துரையை அரசு ஏற்றுக்கொண்டு பள்ளி பெயர்பலகையில் மாற்றம் செய்தது. அதேபோன்று வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பாதிக்கப்பட்ட பலர் அளித்த மனுக்களை விசாரித்து அவர்களுக்கு நிவாரண தொகையை உடனடியாக வழங்கவும் அரசுக்கு பரிந்துரை செய்தது.
இந்த ஆணையம், சென்னை அண்ணாசாலையில் தேவ நேய பாவாணர் நூலக கட்டிடத்தின் ஒரு பகுதியில் வாடகை அடிப்படையில் செயல்பட்டு வருவதால் அண்ணாசாலையில் நிரந்தர கட்டிடத்தில் செயல்படவோ அல்லது பசுமை வழிச்சாலையில் உள்ள அரசு பங்களாவில் செயல்படவோ வழிவகை செய்ய வேண்டும் என ஆணையத்தின் தரப்பில் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
அதேபோன்று, ஆணையத்தில் பணியாற்றுபவர்கள் தலைமைச் செயலகத்தில் இருந்து மாற்றுப்பணி அடிப்படையில் நியமிக்கப்படுவதால் தமிழ்நாடு அரசு ப்பணியாளர் தேர்வாணையம் மூலம் ஆணையத்துக்கென்று நிரந்தர அலுவலர்களை நியமிக்கவும், ஆணையம் சீராக செயல்பட முழுநேர உறுப்பினர் செயலரை நியமனம் செய்யவும் வலியுறுத்தப்பட்டு உள்ளது.