யார் அந்த ஞானசேகரன்?: சபாநாயகர் அப்பாவு விளக்கம்

யார் அந்த ஞானசேகரன்?: சபாநாயகர் அப்பாவு விளக்கம்
X

appavu

யார் அந்த ஞானசேகரன் என்பது குறித்து சபாநாயகர் அப்பாவு விளக்கம் அளித்துள்ளார்.

நெல்லையில் சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் தம்பி ஞானசேகரன் குறித்து செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது: கடந்த 10-ந்தேதி நிரஞ்சன் என்ற தம்பி இந்தியாவின் வெற்றி என்று ஒரு புத்தகம் வெளியிட்டார். அதை வெளியிடப்போகும்போது நீங்கள் சொன்ன பெயருடைய ஒருவர் துண்டு போட வந்தார். அவர் ஞானசேகரன் என்றதும் பயமாக இருக்கிறது. நீ அந்த ஞானசேகரனா... என்றேன். அவரும் நான் அவர் இல்லை என்று கூறினார். அந்த ஞானசேகரனை கை காட்டி தான் என் தம்பி ஞானசேகரன் பெயர் கொண்டவர் தான் இந்த தவறு செய்துள்ளார். அதற்குத்தான் 3 ஐ.பி.எஸ். பெண் அதிகாரிகள் போட்டு இருக்கிறோம் என்று சொன்னேன். நான் குறிப்பிட்டு பேசிய வேறு ஒரு ஞானசேகரனின் பெயரை குற்றவாளி ஞானசேகரனுடன் ஒப்பிட்டு சர்ச்சையாக்கி விட்டனர். இந்த 2 பேர் ஒப்பீடு போல் நிறைய சம்பவங்களை ஒப்பிட்டு உள்ளேன். வீடியோவில் இன்னும் நிறைய இருக்கிறது. அதை நீங்கள் போய் கேளுங்கள். அதை எடுத்து போடுவதற்கு தயாரா என்று கேளுங்கள் என்று அவர் கூறினார்.

Tags

Next Story