2021 திமுக தேர்தல் அறிக்கையில் 80% வாக்குறுதிகள் நிறைவேற்றம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

2021 திமுக தேர்தல் அறிக்கையில் 80% வாக்குறுதிகள் நிறைவேற்றம்:  முதல்வர் மு.க.ஸ்டாலின்
X
2021 திமுக தேர்தல் அறிக்கையில் 80% வாக்குறுதிகள் நிறைவேற்றம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

2021 திமுக தேர்தல் அறிக்கையில் 80 சதவீதம் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. வாக்குறுதியில் அறிவிக்கப்படாமலேயே பல்வேறு திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றியும் உள்ளார். இதுகுறித்து, திமுக தலைமை கழகம் வெளியிட்ட அறிக்கை: 2021 சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி திமுக தனது தேர்தல் அறிக்கையில் 505 தேர்தல் வாக்குறுதிகளை அளித்தது. அவற்றில் 364 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு செயல்பாட்டில் இருக்கின்றன. 40 அறிவிப்புகள் அரசின் பரிசீலனையில் இருக்கிறது.

மொத்தம் 404 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளில் இது 80 சதவீதம் ஆகும். மீதமுள்ள 101 வாக்குறுதிகளில் 37 வாக்குறுதிகள் ஒன்றிய பாஜ அரசு ஒத்துழைக்காததால் நிலுவையில் உள்ளன. குறிப்பாக நீட் தேர்வு ரத்து, திருக்குறளை தேசிய நூலாக அறிவிப்பது போன்ற வாக்குறுதிகள் ஒன்றிய அரசின் ஒத்துழைப்பு கிடைத்தால் மட்டுமே நிறைவேற்றப்படக் கூடிய வாக்குறுதிகள் ஆகும். 64 திட்டங்கள் தற்போது நடவடிக்கைக்கு எடுத்துக்கொள்ளப்படாத சூழல் உள்ளது. உள்ளூர் போராட்டங்கள்- ஒத்துழைப்பின்மை, தேவைப்படாத சூழல் நிலவுவது போன்ற காரணங்களால் இந்த 64 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.

Next Story