குஷ்பு- பா.ஜ.க. மகளிர் அணி நிர்வாகிகள் கைது; தமிழிசை கண்டனம்

குஷ்பு- பா.ஜ.க. மகளிர் அணி நிர்வாகிகள் கைது; தமிழிசை கண்டனம்

ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்

குஷ்பு உள்பட மகளிர் அணி நிர்வாகிகளை போலீசார் கைது செய்ததற்கு பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், பெண்களுக்கு உரிய பாதுகாப்பு கொடுத்து சட்டம்- ஒழுங்கை பாது காக்க வேண்டும் என்பதை வலியுறுத்திம் பா.ஜ.க. போராட்டத்தை தீவிரப்படுத்தி உள்ளது. அதன்படி, இன்றைய பேரணிக்கு அனுமதி கேட்டு மதுரை மாநகர் மாவட்ட பா.ஜ.க. சார்பில் திலகர் திடல் போலீசாரிடம் அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டது. ஆனால் மாநகர காவல்துறை சார்பில் அனுமதி மறுக்கப்பட்டது. இருந்தபோதிலும் தடையை மீறி பேரணி நடைபெறும் என்று சென்னையில் மகளிரணி நிர்வாகிகள் தெரிவித்தனர். அதன்படி மதுரை சிம்மக்கல் பகுதியில் இருந்து இன்று பிரமாண்ட பேரணி நடைபெற்றது. டிராக்டரில் தொடங்கிய பேரணிக்கு மாநில மகளிரணி தலைவர் உமாரதி ராஜன் தலைமை தாங்கினார். பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு பேரணியை தொடங்கி வைத்தார். இதில் தமிழகம் முழுவதிலும் இருந்து பல்லாயிரக்க ணக்கான மகளிரணி நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இந்நிலையில், குஷ்பு உள்பட மகளிர் அணி நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர். இதற்கு, பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமிழிசை தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், மதுரையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கேட்டு குரல் எழுப்பிய சகோதரி குஷ்பூ சுந்தர் தலைமையில் போராட்டத்தில் கலந்து கொண்ட பாஜக மகளிர் அணி தலைவி உமாரதி, செயலாளர் பிரமிளா சம்பத், சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சரஸ்வதி, மாநில செயலாளர் ஆனந்த பிரியா மற்றும் மகளிர் அணி நிர்வாகிகளை கைது செய்ததை வன்மையாக கண்டிக்கிறேன். அதே மதுரையில் டங்சன் தொழிற்சாலைக்கு இப்போது அனுமதி மறுபரிசீலனை செய்யப்படுகிறது என்று மத்திய அரசு தெரிவித்த பின்பும் வேண்டுமென்றே போராடும் வைகோவிற்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. நீதி கேட்டு போராடிய கண்ணகியின் மண்ணில்.. பெண்கள் நீதி கேட்பதற்கு தடை விதிக்கும் திமுக அரசிற்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த அளவிற்கு பெண்களிடம் பாராபட்சமாக நடந்து கொள்ளக் கூடாது என்பதை வலிமையாகவே பதிவு செய்கிறேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags

Next Story