மேலூர் அருகே பஜக தொண்டர்கள் தாக்கப்பட்டதற்கு வேட்பாளர் கடும் கண்டனம்
ஆறுதல் கூறிய வேட்பாளர்
தமிழ் புத்தாண்டு மற்றும் அண்ணல் அம்பேத்கர் பிறந்த தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் மதுரை மாவட்டம் மேலூர் அருகே எட்டிமங்கலம் கிராமத்தில் பாஜக தொண்டர்கள் ஆட்டோவில் மதுரை பாஜக வேட்பாளர் ராம சீனிவாசனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு இருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆட்டோவை வழிமறித்து,
ஆட்டோவில் இருந்த பாஜக தொண்டர்கள் இரண்டு பேரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் இரண்டு பேரும் படுகாயமடைந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மீனாட்சி சுந்தரம் ராஜபாண்டி ஆகிய பாஜக தொண்டர்களை மதுரை பாஜக வேட்பாளர் கிராம சீனிவாசன் நேரில் சந்தித்து நலம் விசாரித்து ஆறுதல் கூறினார்.
இந்த சந்திப்பின் போது மதுரை மாநகர் மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன் மற்றும் பாஜக நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் பலர் உடன் இருந்தனர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பாஜக வேட்பாளர் ராம சீனிவாசன், பாஜக தொண்டர்கள் முறையாக தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெற்று வழிமுறைகளை பின்பற்றி பிரச்சாரம் செய்து கொண்டிருந்தனர்.
ஆனால் வேண்டுமென்றே விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நாட்டை வழிமறித்து அவர்களை கீழே இறக்கிவிட்டு கடுமையாக தாக்கியுள்ளனர் இது மிகவும் கண்டனத்திற்குரியது மேலும் நரேந்திர மோடி தமிழ்நாட்டுக்கு உள்ளே வர முடியாது என்று கூறி தாக்கி உள்ளனர். இதுபோன்ற செயல்களை விசிக்கவினர் தொடர்ந்து செய்து வருகிறது இதற்கு தமிழக அரசு ஆதரவாக உள்ளது.பாஜகவிற்கும் விசிகவிற்கும் அடிக்கடி மோதல் நடந்து வருகிறது. தேர்தல் சமயத்தில் நடைபெற்ற இது போன்ற சம்பவம் திமுகவிற்கு தோல்வி பயத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது ஜனநாயக நாடு,தேர்தல் வந்துவிட்டாலே அனைத்து கட்சிகளும் பரப்பரை செய்து பிரச்சாரம் செய்வது இயல்பான ஒன்று. இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும்,தாக்கப்பட்ட இரண்டு பேரும் மருத்துவமனையில் நன்றாக உள்ளனர் மருத்துவர்கள் நல்ல முறையில் சிகிச்சை அளிக்கின்றனர் என்று கூறினார்