கேரளா செல்லும் முதல்வர் – கேரள முதல்வரிடம் பேசி தீர்வு காண்பார்!

கேரளா செல்லும் முதல்வர் – கேரள முதல்வரிடம் பேசி தீர்வு காண்பார்!

துரை முருகன் 

சட்­டப்­பே­ர­வை­யில் நேற்று பேசிய எதிர்க்­கட்­சித் தலை­வர் எடப்­பாடி பழ­னிச்­சா­மிக்கு பதி­ல­ளிக்­கை­யில் நீர்­வ­ளத்­துறை அமைச்­சர் துரை­மு­ரு­கன் அவர்­கள், ‘‘தமிழ்­நாடு அர­சின் முல்­லைப் பெரி­யாறு பழு­து­பார்ப்­புப் பணி­யைத் தடுக்­கக் கூடாது என உச்­ச­நீ­தி­மன்­றம் திட்­ட­ வட்­ட­மா­கத் தெரி­வித்­துள்­ளது’’ என்று குறிப்­பிட்­டார்.

அந்த விவா­தம் வரு­மாறு:

எடப்­பாடி கே. பழ­னி­சாமி:முல்­லைப் பெரி­யாறு அணை­யின் ஆண்டு பரா­ம­ரிப்­புப் பணி­கள் ஒவ்­வோ­ராண்­டும் மேற்­கொள்­ளப்­ப­டு­வது வழக்­கம். கடந்த வாரம் 4–12–2024 அன்று நம்­மு­டைய பொதுப் பணித் துறை அதி­கா­ரி­கள் முல்­லைப் பெரி­யாறு அணை பரா­ம­ரிப்­புப் பணி­க­ளுக்­காக 2 லாரி­க­ளில் கட்­டு­மா­னப் பொருட்­களை வனத் துறை­யின் வழி­யா­கக் கொண்டு செல்­கின்­ற­போது வல்­லக்­க­டவு என்ற இடத்­தில் அதைத் தடுத்து நிறுத்தி, அந்த வாக­னம் செல்ல முடி­யாத ஒரு சூழ்­நி­லையை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றார்­கள். அத­னால் அங்கு அந்த பரா­ம­ரிப்­புப் பணி­களை மேற்­கொள்ள முடி­யாத ஒரு சூழ்­நிலை ஏற்­பட்­டு­விட்­டது. கேரள அரசு அணை பரா­ம­ரிப்­புப் பணிக்கு இடை­யூறு செய்த கார­ணத்­தி­னால் அந்­தப் பகு­தி­யில் இருக்­கின்ற 5 மாவட்ட விவ­சா­யப் பெருங்­குடி மக்­கள் அங்கே போராட்­டத்­தில் ஈடு­பட்­டி­ருக்­கின்­றார்­கள். ஜான் பென்னி குயிக் நினை­வி­டத்­தில் தொடர்ந்து போராட்­டத்­தில் ஈடு­பட்­டுக் கொண்­டி­ருக்­கின்­றார்­கள். அந்­தப் பகு­தி­யில் கொந்­த­ளிப்­பான ஒரு நிலை ஏற்­பட்­டுக் கொண்­டி­ருக்­கி­றது. முத­ல­மைச்­சர் அவர்­கள் வரு­கிற 11 ஆம் தேதி கேர­ளா­விற்கு ஒரு நிகழ்ச்­சிக்­குச் செல்­வ­தாக செய்­தி­களை நாம் பார்த்­தோம். அதே நிகழ்ச்­சி­யில் கேரள முத­ல­மைச்­ச­ரும் அங்கு கலந்­து­கொள்­கி­றார்­கள். ஆகவே, அவர்­க­ளி­டத்­திலே இதைப்­பேசி, முல்­லைப் பெரி­யாறு அணை­யி­ னு­டைய ஆண்டு பரா­ம­ரிப்­புப் பணி­கள் தொட­ரு­வ­தற்­குண்­டான சூழ்­நி­லையை உரு­வாக்­கித் தர வேண்­டும்.

நீர்­வ­ளத்­துறை அமைச்­சர் துரை­மு­ரு­கன்:எதிர்க்­கட்­சித் தலை­வர் அவர்­கள் கொண்டு வந்­தி­ருக்­கிற இந்த கவன ஈர்ப்­புத் தீர்­மா­னத்தை நான் ஏற்­றுக்­கொள்­கி­றேன். கார­ணம், அப்­படி ஒரு நிகழ்வு நடந்­தி­ருக்­கி­றது. முல்­லைப் பெரி­யாறு அணைக்கு உச்ச நீதி­மன்­றத்­திலே தீர்ப்பு சொல்­கி­ற­போது, தமிழ்­நாடு அரசு முல்­லைப் பெரி­யாறு அணை­யினை பழு­து­பார்ப்­ப­தற்கு வேண்­டிய நட­வ­டிக்கை எடுக்­கும்­போது, எந்த நட­வ­டிக்கை எடுத்­தா­லும் கேரள அரசு அதைத் தடுக்­கக்­கூ­டாது என்று திட்­ட­வட்­ட­மாக அறி­வு­றுத்­தி­யி­ருக்­கி­றது. இது கேரள அர­சுக்­கும் தெரி­யும். நமக்­கும் தெரி­யும். அவர்­கள் இருக்­கின்­ற­போ­து­கூட சில­நே­ரங்­க­ளில் இது­போன்று நடப்­பது உண்டு. பிறகு பேசி முடிப்­ப­துண்டு. எனவே, இது முடிந்­த­வு­டனே கேர­ளத்­தில் இருக்­கிற அந்த நீர்­வ­ளத் துறை அதி­கா­ரி­க­ளுக்­குத் தெரி­வித்­தி­ருக்­கி­றோம். இத­னால் இரு மாநி­லங்­க­ளுக்­கி­டை­யில் வேறு­மு­றை­யி­லான தக­ரா­று­கள் வந்­து­வி­டும் என்று சொல்­லி­யி­ருக்­கி­றோம்.

அதே­போன்று, எதிர்க்­கட்­சித் தலை­வர் அவர்­கள் சொன்­ன­தைப்­போல, நாளைக்கு முத­ல­மைச்­சர் அவர்­கள் அங்கு போகி­றார். நானும்­தான் கூடப் போகி­றேன். இது­கு­றித்து பேசி­விட்டு வரு­வோ­மென்று தெரி­வித்­துக்­கொள்­கி­றேன்.

வி.பி. நாகை­மாலி:எதிர்க்­கட்­சித் தலை­வர் அவர்­கள் பேசு­கி­ற­போது, கேரள அரசு இடை­யூறு செய்­கி­றது என்­கிற ஒரு வார்த்­தையை அவர் பயன்­ப­டுத்­தி­னார்.

அமைச்­சர் துரை­மு­ரு­கன்:நான் அதை ஏற்­கெ­னவே குறிப்­பிட்­டேன். முல்­லைப் பெரி­யாறு வழக்கு உச்ச நீதி­மன்­றத்­திற்கு வந்­த­போது, உச்ச நீதி­மன்­றம் திட்­ட­வட்­ட­மாக சொன்­னது; தமிழ்­நாடு அரசு பழு­து­பார்க்­கப்­போ­கி­ற­போது எதை­யும் தடுக்­கக்­கூ­டாது என்று சொல்­லி­யி­ருக்­கி­றது. தடுத்­தால் அதற்கு என்ன பெயர்? அவர் சொல்­வ­து­தான் பெயர்.

இவ்­வாறு பேர­வை­யில் விவா­தம் நடை­பெற்­றது.

Tags

Next Story