அதிமுகவினர் மீதான உரிமை மீறல் நடவடிக்கை திரும்பப் பெறப்பட்டது!!

அதிமுகவினர் மீதான உரிமை மீறல் நடவடிக்கை திரும்பப் பெறப்பட்டது!!

Speaker Appavu

முதல்வரின் கோரிக்கையை ஏற்று அதிமுகவினர் மீதான உரிமை மீறல் நடவடிக்கை திரும்பப் பெறப்பட்டது.

முதல்வரின் கோரிக்கையை ஏற்று அதிமுகவினர் மீதான உரிமை மீறல் நடவடிக்கை திரும்பப் பெறப்பட்டது. சட்டப்பேரவையில் உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின்; சட்டப்பேரவைக்கு பதாகையுடன் வந்து அதிமுக உறுப்பினர்கள் தவறு செய்துள்ளனர். ஆளுநர் அவையில் இருப்பது தெரிந்தும் பதாகைகளை ஏந்தி வந்தது தவறு; பதாகையுடன் பேரவைக்கு வந்த உறுப்பினர்கள் மீது சபாநாயகர் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் என்று கேள்வி எழுப்பினார். மேலும் ஆளுநர் வரும்போது எப்போதும் திமுகவினர் பதாகை ஏந்தி அவைக்குள் போராடியதில்லை. அவைக்கு பதாகை ஏந்தி வந்தது தவறு என திமுக உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று கூறினார். தொடர்ந்து சட்டப்பேரவையில் ஆளுநர் இருந்தபோது ஏன் பதாகை காட்டினீர்கள்? என அதிமுக உறுப்பினர்களிடம் சபாநாயகர் கேள்வி எழுப்பினார். ஆளுநர் உரையின்போது பதாகை ஏந்தி அதிமுகவினர் போராட்டம் நடத்தியது குறித்து உரிமை மீறல் குழு விசாரிக்கும். விதிகளை மீறிய அதிமுக உறுப்பினர்கள் மீது என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து அவை உரிமைக்குழு விசாரித்து அறிவிக்கும் என்று சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டுள்ளார். தொடர்ந்து பேசிய முதல்வர்; விதிகளை மீறிய அதிமுக உறுப்பினர்கள் மீது என்ன நடவடிக்கை என நான் கேட்டதை ஏற்று, அவையின் உரிமை மீறல் குழு நடவடிக்கை எடுக்கும் என நீங்கள் ஒரு தீர்ப்பு அளித்தீர்கள். அதில் நான் குறுக்கிட விரும்பவில்லை. எனினும், வரும் காலங்களில் அவர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடமாட்டார்கள் என உறுதியளித்தால், நடவடிக்கையை திரும்ப பெறலாம்” என சபாநாயகரிடம் முதலமைச்சர் கோரிக்கை வைத்தார். முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்று அதிமுகவினர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை திரும்பப் பெறப்பட்டது.

Tags

Next Story