திருத்தணி தொகுதியில் திட்டபணிகளை பயன்பாட்டிற்கு திறந்து வைத்த எம்எல்ஏ

திருத்தணி தொகுதியில்  திட்டபணிகளை பயன்பாட்டிற்கு திறந்து வைத்த எம்எல்ஏ

திறந்து வைத்த எம்எல்ஏ

திருத்தணி தொகுதிக்குட்பட்ட 10ற்கும் மேற்ப்பட்ட கிராமங்களில் 6 கோடி மதிப்பீட்டில் திட்டபணிகளை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தொகுதிக்குட்பட்ட ஆர் கே பேட்டை ஒன்றியத்தில் உள்ள காளிகாபுரம், வீரமங்கலம், மோட்டூர், பெரியநாகபூண்டி, சின்ன நாகபூண்டி, திருநாதபுரம், மேல்வலசை, புதூர்மேடு, தேவலாபுரம், மகன்காளிகாபுரம், பாலாபுரம், கதனநகரம் ஆகிய கிராமங்களில் கலையரங்கம், நியாவிலைக்கடை,

அங்கன்வாடி மையம், மேம்பாலம் அமைத்தல் ஆகியவற்றை சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து கட்டுவதற்கான பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், கட்டிமுடிக்கப்பட்டு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களினால் திறந்து வைக்கப்பட்ட கூடுதல் பள்ளி வகுப்பறை கட்டிடங்கள், அங்கன்வாடிமையங்கள் என ஒட்டுமொத்தமாக 6 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை மக்கள் பயன்பாட்டிற்கு திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளரும்,

திருத்தணி சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.சந்திரன் தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து அங்கன்வாடி மையங்களில் ஆய்வு பணிகளை மேற்கொண்டும், பள்ளி மாணவ மாணவிகளிடத்திலும் சட்டமன்ற உறுப்பினர் சந்திரன் கலந்துரையாடினார். இந்நிகழ்வில் ஒன்றிய செயலாளர்கள் பழனி, சந்திரன், சேர்மேன் ரஞ்சிதா ஆபாவணண் உட்பட அரசு அதிகாரிகள் என அனைவரும் கலந்துகொண்டனர்.

Tags

Next Story