‘ஒரே நாடு – ஒரே தேர்தல்’ மசோதா தாக்கல் இல்லை!

‘ஒரே நாடு – ஒரே தேர்தல்’ மசோதா தாக்கல் இல்லை!

ஒரே நாடு ஒரே தேர்தல் 

மக்­க­ள­வை­யின் 543 தொகு­தி­கள், மாநி­லங்­க­ளின்4 ஆயி­ரத்து 120 சட்­டப்­பே­ர­வைத்தொகு­தி­கள், 30 லட்­சத்­துக்­கும் மேற்­பட்ட உள்­ளாட்­சிப் பத­வி­ க­ளுக்கு ஒரே நேரத்­தில் தேர்­தல் நடத்த ஒன்­றிய அரசு திட்­ட­மிட்­டுள்­ளது.

இந்த திட்­டத்தை ஆய்வு செய்ய முன்­னாள் குடி­ய­ர­சுத் தலை­வர் ராம்­நாத் கோவிந்த் தலை­மை­யில் கடந்த ஆண்டு செப்­டம்­ப­ரில் உயர்­நி­லைக் குழு அமைக்­கப்­பட்­டது.

ராம்­நாத் கோவிந்த் குழு கடந்த மார்ச் மாதம் குடி­ய­ர­சுத் தலை­வர் திர­வு­பதி முர்­மு­வி­டம் அறிக்­கையை அளித்­தது.

மக்­க­ளவை, மாநி­லங்­க­ளின் சட்­டப் பேர­வை­க­ளுக்கு ஒரே கட்­ட­மாக தேர்­தல் நடத்த வேண்­டும்.இந்த தேர்­த­லுக்கு பிறகு அடுத்த 100 நாட்­க­ளில் நாடு முழு­வ­தும் ஒரே கட்­ட­மாக உள்­ளாட்சி தேர்­தலை நடத்த வேண்­டும்,ஒரே வாக்­கா­ளர்பட்­டி­யலை தயா­ரிக்க வேண்­டும் என்­பன உள்­ளிட்ட பல்­வேறு பரிந்­து­ரை­களை ராம்­நாத் கோவிந்த் குழு அளித்­துள்­ளது.

இத­னைத் தொடர்ந்து ஒரே நாடு, ஒரே தேர்­தல் தொடர்­பான 2 மசோ­தாக்­க­ளுக்கு ஒன்­றிய அமைச்­ச­ரவை ஒப்­பு­தல் அளித்­தது.

‘ஒரே நாடு ஒரே தேர்­தல்’ தொடர்­பான இரண்டு மசோ­தாக்­கள் மக்­க­ள­வை­யில் சட்­டத்­துறை அமைச்­சர் அர்­ஜுன் ராம்மேக்­வால் டிச.15 அன்று தாக்­கல்செய்­வார் என அறி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.

இந்­நி­லை­யில்,புதுப்­பிக்­கப்­ பட்ட மக்­க­ளவை அலு­வல் பட்­டி­யல் நேற்று காலை வெளி­ யி­டப்­பட்­டுள்­ளது.

இந்நிலையில் எதிர்க்கட்சி களின் பலத்த எதிர்ப்பால்,கண்ட னத்தால் இன்றைய தினத்­துக் ­கான அலு­வல் பட்­டி­ய­லில் இருந்து இந்த இரண்டு மசோ­தாக்­க­ளும் நீக்­கப்­பட்­டுள்­ளன. நடப்பு குளிர்­கால கூட்­டத்­தொ­டர் 20ஆம் தேதி முடி­வ­டைய உள்ள நிலை­யில் இந்த மசோ­தாக்­களை தாக்­கல் செய்­யாமல் பின் வாங்கியுள்ளது பா.ஜ.க. அரசு.

Tags

Next Story