கட்சி கொடி கட்டியதாலேயே தி.மு.க. என ஆகிவிடாது: திருமாவளவன்

கட்சி கொடி கட்டியதாலேயே தி.மு.க. என ஆகிவிடாது: திருமாவளவன்
X

thirumavalavan

கட்சி கொடி கட்டியதாலேயே தி.மு.க. என ஆகிவிடாது என கானத்தூர் சம்பவம் தொடர்பாக விசிக தலைவர் திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்.

விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், வக்பு வாரிய திருத்த சட்ட மசோதா அரசியலமைப்பு சட்ட மரபுகளுக்கே எதிரானதாக இருக்கிறது. ஆகவே தான் அனைத்து எதிர்க்கட்சிகளும் அதனை அறிமுகப்படுத்துகிறபோது கடுமையாக எதிர்ப்புகளை முன்வைத்தோம். அதன் அடிப்படையில் பாராளுமன்ற கூட்டு நடவடிக்கை குழு அமைக்கப்பட்டது. ஆனால் எதிர்க்கட்சியை சார்ந்த தலைவர்களை முறையாக பேச அனுமதிக்கவில்லை. அவர்கள் கருத்துக்களை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை. பலமுறை அவர்களை அந்த கூட்டத்தில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றி இருக்கிறார்கள். மீண்டும் அதனை நடைமுறைப்படுத்துவதற்கு நிறைவேற்றுவதற்கு பா.ஜ.க. அரசு முயற்சிக்கிறது. அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான ஒரு அரசு பா.ஜ.க. அரசு என்பதை உறுதிபடுத்தும் விதத்தில் இந்த விவகாரத்தில் அவர்கள் நடந்து கொள்கிறார்கள். இந்த போக்கை விடுதலை சிறுத்தைகள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. அ.தி.மு.க. ஒரு பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும்நிலையில் கூட இதுதொடர்பாக பேசுவதில்லை. சென்னை ஈ.சி.ஆர். சாலையில் காரில் சென்ற பெண்களை, வேறொரு காரில் சென்றவர்கள் துரத்திச் சென்ற விவகாரம் குறித்து காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய தீவிரமான நடவடிக்கைளை மேற்கொண்டு வருகிறார்கள். அவ்வாறு குற்றச்செயல்களை ஈடுபட்டவர்கள் வண்டியில் கட்சி கொடி கட்டி இருப்பதால் அதற்கு கட்சி பொறுப்பாக முடியாது. யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறை மெத்தனம் காட்டக்கூடாது. அவர்கள் மீதான நடவடிக்கை உறுதிப்படுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன் என்று கூறினார்.

Tags

Next Story