நீதிமன்றத்துக்கு ஏன் அழுத்தம் தருகிறீர்கள்?.. ஜனநாயகன் படத்தை வெளியிட ஐகோர்ட் தலைமை நீதிபதி தடை

X
நீதிமன்றத்துக்கு ஏன் அழுத்தம் தருகிறீர்கள்?.. ஜனநாயகன் படத்தை வெளியிட ஐகோர்ட் தலைமை நீதிபதி தடை
படத்தயாரிப்பாளர் பொய்யாக ஒரு அவசரத்தை உருவாக்கி சான்றிதழ் வழங்கக் கோரி நீதிமன்றத்துக்கு எப்படி அழுத்தம் தர முடியும்? போலியான அவசரத்தை கூறி நீதிமன்றத்துக்கு அழுத்தம் தந்தது ஏன்? ரிலீஸ் தேதியை முடிவு செய்துவிட்டோம் என்பதற்காகவே எல்லோரும் உங்கள் விருப்பத்துக்கு செயல்பட முடியுமா? ஜனநாயகன் திரைப்படத்துக்கு சான்றிதழ் வழங்க உத்தரவிட்ட தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதித்து தலைமை நீதிபதி ஸ்ரீவஸ்த்வா, நீதிபதி அருள் முருகன் அமர்வு உத்தரவிட்டுள்ளார்.தொடர்ந்து ஜனநாயகன் பட வழக்கை ஜனவரி 21ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர். தணிக்கைச்சான்று வழக்கு நிலுவையில் உள்ளதால் பொங்கலுக்கு 'ஜனநாயகன்' ரிலீஸ் இல்லை.
Next Story
