மத்திய அரசு பட்ஜெட் விவசாயிகளை ஏமாற்றி விட்டது - பி ஆர் பாண்டியன்

மத்திய அரசு பட்ஜெட் விவசாயிகளை ஏமாற்றி விட்டது - பி ஆர் பாண்டியன்

 பி.ஆர் பாண்டியன் ஆய்வு 

டெல்லியில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர பிரதமர் கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றுவதற்கான அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம்பெறும் என எதிர்பார்த்து இருந்தோம்.ஒட்டுமொத்தமாக மத்திய அரசுடைய பட்ஜெட் விவசாயிகளை ஏமாற்றி விட்டது. 16 லட்சம் கோடி விவசாயிகளுக்கான கடன் இலக்கு என அறிவிப்பதும் 14 லட்சம் கோடி வரை வட்டி மான்யம் வழங்கி உள்ளதாக தெரிவிப்பதும் பொய் பிரச்சாரமாகும் என பி.ஆர் பாண்டியன் தெரிவித்தார்.

தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பி ஆர் பாண்டியன் நாகப்பட்டினம், கீழ்வேளூர், கீழையூர், தலைஞாயிறு ஒன்றிய பகுதிகளில் பல்வேறு கிராமங்களில் சம்பா தாளடி பயிர்கள் பாதிப்பு குறித்து நேரில் ஆய்வு செய்த பின்னர் நாகப்பட்டினத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: மத்திய அரசு பிரதமர் மோடி தலைமையிலான இரண்டாவது ஆட்சி காலத்தில் இறுதி கட்டமாக தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட்டை விவசாயிகள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்தனர். கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் டெல்லியில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர பிரதமர் கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றுவதற்கான அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம்பெறும் என எதிர்பார்த்து இருந்தோம்.

ஒட்டுமொத்தமாக மத்திய அரசுடைய பட்ஜெட் விவசாயிகளை ஏமாற்றி விட்டது. குறிப்பாக லாபகரமான குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணய சட்டம் விவசாயிகள் உற்பத்திசந்தை படுத்துவதற்கான அடிப்படைக் கட்டமைப்புகள், ஏற்றுமதி இறக்குமதி கொள்கைகளில் இந்திய விவசாயிகளுக்கு ஆதரவான சட்டங்கள் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்த்து இருந்தோம். உரத்திற்கான பயன்பாட்டை குறைக்க வேண்டும் பாரம்பரிய வேளாண் முறைக்கு இயற்கை உர உற்பத்தியை ஊக்கப்படுத்த நினைக்கிறதே தவிர, உர உற்பத்திக்கு தேவையான மானியங்கள் வழங்கப்படவில்லை இயற்கை சீற்றங்களால் உற்பத்திக்கு பெற்ற . கடனை பாதிக்கப்பட்ட ஆண்டுகளில் திரும்ப செலுத்த முடியவில்லை. மாநில அரசுகள் பாதிக்கப்பட்ட ஆண்டுகளுக்கான கூட்டுறவு கடன்களை தள்ளுபடி செய்துள்ளனர்

. இந்நிலையில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் இந்தியா முழுவதும் 80% பேர் கடன் பெற தகுதியற்றவர்கள் என பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் 16 லட்சம் கோடி விவசாயிகளுக்கான கடன் இலக்கு என அறிவிப்பதும் 14 லட்சம் கோடி வரை வட்டி மான்யம் வழங்கி உள்ளதாக தெரிவிப்பதும் பொய் பிரச்சாரமாகும். விவசாயிகள் பெயரில் கார்ப்ரேட் நிறுவனங்கள் கடன் பெற்று மோசடிக்கு வழிவகுக்கிறது.எனவே வேளாண் கடன் முழுவதும் தள்ளுபடி செய்ய மறுப்பது கண்டிக்கத்தக்கது.

உடனடியாக குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணய சட்டம் கொண்டு வர வேண்டும். கடன் முழுவதையும் நிபந்தனையின்றி தள்ளுபடி செய்ய வலியுறுத்தியும், பிரதமர் மோடி கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் உடன் நிறைவேற்ற கோரி வருகிற 13-ஆம் தேதி டெல்லி மாநகரத்தில் எஸ் கே எம் (NP) போராட்டத்தை தீவிர படுத்த உள்ளோம்.

காவிரி டெலடா மாவட்டங்களில் 10 லட்சம் ஏக்கரில் சாம்பா தாளடி பயிர்கள் கதிர் வரும் நிலையில் கருகத் தொடங்கியிருக்கிறது மேட்டூர் அணையின் தண்ணீரை பாசனைத்திற்கு விடுவிக்க மறுத்து தலைமைச் செயலாளர் சட்ட விரோதமாக செயல்படுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. உடனடியாக தண்ணீரை விடுவிக்க வலியுறுத்தியும் . நாகை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு குருவைக்கு அறிவித்த இடுபொருள் இழப்பீட்டுத் தொகையை உடன் வழங்க கோரியும் வருகிற 3ஆம் தேதி சனிக்கிழமை காலை 9 மணி முதல் நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்கும் சாலை மறியல் போராட்டம் நடைபெற உள்ளது என்றார். மாநில துணைச் செயலாளர் எம் செந்தில்குமார், அமைப்பு செயலாளர் எஸ்.ஸ்ரீதர் நாகை மாவட்ட தலைவர் புலியூர் பாலசுப்ரமணியன், செயலாளர் கமல்ராமன் மாவட்டத் துணைச் செயலாளர் திருமருகள் சேகர், நாகை ஒன்றிய செயலாளர் செல்லப்பா,தலைஞாயிறு ஒன்றிய செயலாளர் அமானுல்லாகான் உள்ளிட்ட நிர்வாகிகள், விவசாயிகள் உடன் இருந்தனர்.

Tags

Next Story