அண்ணாமலை பதவிக்கு ஆபத்தா..? - அடுத்த பாஜக தலைவர் இவரா..?

அண்ணாமலை பதவிக்கு ஆபத்தா..? - அடுத்த பாஜக தலைவர் இவரா..?
வானதி சீனிவாசன், அண்ணாமலை
அண்ணாமலையின் பாஜக தலைவர் பதவி பறிக்கப்பட்டால் அடுத்து யாருக்கு வாய்ப்பு இருக்கும் என்ற பேச்சு அடிப்படுகிறது.

தமிழ்நாட்டில் பாஜக தனது பலத்தை நிரூபித்தே ஆக வேண்டும் என தீவிரமாக செயல்பட்டு வருகி்றது. தமிழ்நாட்டில் பாஜகவை உச்சத்துக்கு கொண்டு போன அண்ணாமலைக்கு பெரிய போஸ்டிங் தர மோடி திட்டமிட்டுள்ளதால் தமிழ்நாட்டின் அடுத்த பாஜக தலைவருக்கு பெண் ஒருவரின் பெயர் அடிப்படுகிறது. அவர் யார் என்பதை விரிவாக பார்ப்போம்.

கடந்த மக்களை தேர்தலில் தூத்துக்குடியில் போட்டியிட்ட தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் கனிமொழியிடம் தோல்வியடைந்தார். அதன்பின்னர், தமிழிசைக்கு ஆளுநர் பதவி கொடுத்து ஓரம்கட்டிய பிரதமர் மோடி, தமிழக பாஜக தலைவராக அண்ணாமலையை கைக்கட்டினார். தமிழ்நாட்டை சேர்ந்த இவர் கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தார். தனத் பதவியை ராஜினாமா செய்து விட்டு பாஜகவின் மாநில தலைவர் பதவிக்கு மிக எளிதாக வந்தார் அண்ணாமலை. பாஜகவில் பொன்.ராதாகிருஷ்ணன், எச். ராஜா, வானதி ஸ்ரீனிவாசன் போன்ற மூத்த தலைவர்கள் இருக்கும்போது அண்ணாமலை மாநில தலைவராக நியமித்தது அரசியலில் கவனத்தை ஈர்த்தது.

தமிழக மாநில தலைவராக பொறுப்பேற்றதில் அதிமுக கூட்டணியில் பாஜக இருந்தது. எதிர்கட்சியான திமுகவை கடுமையாக அண்ணாமலை விமர்சித்து வந்தார். அதிமுக கூட்டணியில் மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தலை சந்தித்த பாஜகவுக்குள் கூட்டணி முறிவு ஏற்பட்டது. அண்ணாமலை தமிழக முதல்வர் பதவிக்கு அடிப்போடுவதாக தெரிந்ததும் உஷாரான எடப்பாடி பழனிசாமி பாஜகவை ஓரம்போ என ஒதுக்கி வைத்து தனித்து செயல்பட்டு வருகிறார். அதிமுகவின் கூட்டணியை முறித்து கொண்டதால் தமிழகத்தில் பாஜக பலம் குறைந்து விட்டதாக அதிருப்தி அடைந்த டெல்லி தலைமை, அண்ணமாலை மீது கோபமாக இருந்ததாக பேச்சுகள் அடிப்பட்டன.

என் மண் என் மக்கள் யாத்திரையில் இருந்த அண்ணாமலை உடனடியாக டெல்லிக்கு புறப்பட்டார். பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, அமித்ஷா மற்றும் பிரதமர் மோடி அண்ணாமலைக்கு வார்னிங் கொடுத்ததாக கூறப்படுகிறது. பேட்டி ஒன்றில் பேசிய அமித்ஷா, அதிமுகவுக்காக பாஜக கதவுகள் எப்பொழுதுமே திறந்து இருக்கும் என்றார். அதிமுகவின் பலம் இல்லாவிட்டாலும், மத்திய அரசு ஆதரவை கொண்டு தனக்கான இடத்தை ஸ்டராங் செய்துள்ளார் அண்ணாமலை.

அதிமுக கூட்டணி இல்லாவிட்டாலும் நடைபெறும் மக்களவை கூட்டணியில் பாஜக தனக்கான பலத்தை நிரூபிக்க களமிறங்கியுள்ளது. சமத்துவ மக்கள் கட்சி, பாமகவுடன் கூட்டணி வைத்துள்ள பாஜக தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வருகிறது. இந்த மக்களவை தேர்தலில் பிரதமர் மோடி மற்றும் பாஜகவின் ஒட்டுமொத்த டார்கெட்டாக தமிழ்நாடு உள்ளது. இதனால், டெல்லி தலைவர்களின் விசிட் தமிழ்நாட்டு பக்கம் உள்ளது. ஜேபி நட்டா, அமித்ஷா, பிரதமர் மோடி, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் பாஜக கூட்டணிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து வருகின்றனர்.

கோவையில் போட்டியிடும் அண்ணாமலைக்கு ஆதரவாக பிரதமர் மோடி, அமித்ஷா ரோடு ஷோ நடத்தி வாக்கு சேகரித்தனர். தேர்தல் கருத்துக்கணிப்பில் 2-3 இடங்களில் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு இருக்கும் என கூறப்படுகிறது. நடக்கும் மக்களவை தேர்தலில் பாஜக கணிசமான வெற்றியை பெற்றால் அண்ணாமலைக்கு மத்திய அரசில் கட்டாயம் ஒரு இடம் ஒதுக்க வாய்ப்பு இருப்பதாக கூறபப்டுகிறது. அப்படி அண்ணாமலைக்கு மத்திய அரசு போஸ்டிங் கிடைத்து விட்டால் அடுத்த தமிழக பாஜக தலைவர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதற்கு வானதி சீனிவாசன் பெயர் அடிப்படுகிறது. தமிழகத்தின் அடுத்த பாஜக தலைவராக வானதி சீனிவாசன் நியமிக்கப்படுவார் என கூறப்படுகிறது.

அப்படி தேர்தலில் அண்ணாமலை வெற்றிப்பெறவில்லை என்றால் தமிழிசை சௌந்தரராஜனை போல் பதவி பறிக்கவும் வாய்ப்புள்ளது. இந்த தேர்தல் அண்ணாமலைக்கு டெல்லி மேலிடம் கொடுத்த கடைசி வாய்ப்பு இதை எப்படி அவர் தக்க வைத்து கொள்வார் என்பதே கேள்விகுறியாக உள்ளது அண்ணாமலை பாஜக தலைவரால இருப்பாரா..? வானதி சீனிவாசனுக்கு ஜாக்பாட் அடிக்குமா? என்பதை தேர்தல் முடிவுகளில் தெரிய வரும்.

Tags

Read MoreRead Less
Next Story