ஜனநாயகன் + சிபிஐ.. பவன் கல்யாண் மாதிரி வழிக்கு வாங்க.. இல்லைனா.. விஜய்க்கு அமித் ஷா வார்னிங்?

ஜனநாயகன் + சிபிஐ.. பவன் கல்யாண் மாதிரி வழிக்கு வாங்க.. இல்லைனா.. விஜய்க்கு அமித் ஷா வார்னிங்?
X
ஜனநாயகன் + சிபிஐ.. பவன் கல்யாண் மாதிரி வழிக்கு வாங்க.. இல்லைனா.. விஜய்க்கு அமித் ஷா வார்னிங்?


தமிழ்நாட்டில் NDA கூட்டணியில் விஜய் சேர வேண்டும் என்று டெல்லி பாஜகவும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் விஜய்க்கு நெருக்கடி கொடுப்பதாக கூறப்படுகிறது. விஜய் இதற்கு பெரிதாக இறங்கி வரவில்லை என்பதால் அமித் ஷா தரப்பு கோபத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி விஜயை துணை முதல்வர் பதவிக்கு இறங்கி வரவேண்டும்.. தனியாக நிற்க கூடாது என்று டெல்லி உத்தரவிட்டு உள்ளதாம். முதல்வர் பதவியை நேரடியாக இலக்காகக் கொள்ளாமல், கூட்டணி அமைத்து துணை முதல்வராகப் பொறுப்பேற்பது ஒரு சிறந்த அரசியல் நகர்வாக அமையும் என்று டெல்லி தரப்பு விஜய்யிடம் கூறியுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது அவருக்கு அரசியல் அனுபவத்தையும், அரசியல் ரீதியாக பலத்தையும் தரும் என்று டெல்லி தரப்பி வலியுறுத்தி உள்ளதாம்.

டெல்லி சொன்னது என்ன?

பவன் கல்யாணின் சகோதரரும், பிரபல நடிகருமான சிரஞ்சீவி, முன்பு ஆந்திராவில் முதல்வர் பதவியை தனியாகப் போட்டியிட்டு அடைய முயன்றார். இதற்காக பிரஜா ராஜ்ஜியம் கட்சியை தொடங்கி விஜய் பாணியிலேயே நடத்தினார். ஆனால், அது வெற்றி பெறவில்லை. பின்னர், பவன் கல்யாண் தனியாக ஜனசேனா தொடங்கினார். பாஜக தலைமையிலான NDA கூட்டணியுடன் இணைந்து துணை முதல்வர் பதவிக்கு வழி தேடினார். அதில் வெற்றியும் பெற்றார். இது அவருக்கு ஆந்திர அரசியலில் முக்கியத்துவத்தையும், நிலைத்தன்மையையும் கொடுத்தது.

சிரஞ்சீவி போல தோற்றுவிட வேண்டாம்,, பவன் கல்யாண் போல எங்கள் வழிக்கு வாருங்கள் என்று விஜய்க்கு டெல்லி உத்தரவிட்டு உள்ளதாம். விஜய்யுடனான உரையாடலில், அரசியல் என்பது சினிமா அல்ல. முதல் நாளிலேயே கதாநாயகனாக முடியாது என்று விஜய்யிடம் கூறியதாகத் தெரிகிறது. NDA போன்ற ஒரு வலுவான கூட்டணியுடன் இணைந்து துணை முதல்வர் பதவியை ஏற்பது, விஜய்க்கு நிர்வாக அனுபவத்தையும், அரசியல் நம்பகத்தன்மையையும், தமிழகம் முழுவதும் தனது செல்வாக்கை விரிவாக்க ஒரு வாய்ப்பையும் வழங்கும் என்று ஆலோசனை வழங்கியுள்ளனர்.

சிபிஐ + ஜனநாயகன்

ஒரு பக்கம் ஜனநாயகன் படத்தின் ரிலீசுக்கு மத்திய அரசின் CBFC செக் வைத்துள்ளது. இது தொடர்பான வழக்கில் நேற்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்தின் சார்பில் ஆஜரான ASG, பரிசீலனைக் குழுவின் உறுப்பினர்களில் ஒருவர், தான் திரைப்படம் பார்த்த பிறகு தனது ஆட்சேபனைகள் கூறி இருந்தாலும்.. அது பதிவு செய்யப்படவில்லை என்று புகார் அளித்ததாக நீதிமன்றத்தில் தெரிவித்தார். மேலும், தயாரிப்பு நிறுவனம் தாக்கல் செய்த ரிட் மனுவுக்கு விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய நான்கு வார கால அவகாசம் தேவை என்றும் அவர் கோரினார்.

U/A 16+ சான்றிதழ் வழங்குவதற்காக வாரியம் பரிந்துரைத்த வெட்டுக்கள் மற்றும் மாற்றங்கள் செய்யப்பட்ட பின்னரும், படத்தை மறுபரிசீலனைக்கு அனுப்ப CBFC எவ்வாறு முடிவு செய்ய முடியும் என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.

நீதிபதியின் கேள்விக்கு பதிலளித்த ASG, CBFC தலைவர், பரிசீலனைக் குழு படம் பார்த்த பிறகும் கூட, ஒரு திரைப்படத்தை மீண்டும் மறுபரிசீலனை செய்ய உத்தரவிட முழவதும் அதிகாரம் பெற்றவர் என வாதிட்டார்.

இன்னொரு பக்கம் கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பில், நடிகர் விஜய்க்கு சிபிஐ தரப்பிலிருந்து சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஜனவரி 12 அன்று டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜராகுமாறு அந்த சம்மனில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சம்மனை நேரடியாக எதிர்கொள்ளாமல், தனது சார்பாக ஆஜராவதற்காக, விஜய் தனது பொருளாளர்களில் ஒருவருக்கு அதிகாரப் பத்திரம் வழங்கியுள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

சட்டபூர்வமான இந்த அனைத்து நடவடிக்கைகளுக்காகவும் சுமார் ₹5 லட்சம் செலவில் ஒரு வழக்கறிஞரும் நியமிக்கப்பட்டுள்ளார்.

கரூர் வழக்கு - விஜய் விசாரணை

இந்த வழக்கை விசாரிக்கும் சி.பி.ஐ. அதிகாரிகள், விஜய் பங்கேற்ற திரைப்பட நிகழ்வுகள் மற்றும் அரசியல் கூட்டங்களின் காலவரிசையை திரட்டியுள்ளனர். பின்பு, இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்ததில் சுவாரஸ்யமான தகவல்கள் அவர்களுக்கு கிடைத்ததாக கூறப்படுகிறது.

இதன் அடிப்படையில் அதிகாரிகள் கேட்டதாவது: "விஜய் 'ஜனநாயகன்' நிகழ்ச்சி உள்பட அனைத்து சினிமா நிகழ்வுகளுக்கும் குறித்த நேரத்தில் வந்துள்ளார். மலேசியா நிகழ்விற்கு கூட முதல்நாள் சென்றுள்ளார். ஆவர் படப்பிடிப்புகளுக்கும் ஒருபோதும் தாமதமாக வந்தது கிடையாது."

"ஆனால், அவர் ஏன் அரசியல் கூட்டங்களுக்கு மட்டும் ஏன் தாமதமாக வருகிறார்? அதிக கூட்டத்தைக் காட்டுவதற்கு இதை வேண்டுமென்றே செய்தாரா? கரூர் சம்பவத்திலும் இதுதான் நடந்ததா?" என அதிகாரிகளின் அடுக்கடுக்கான கேள்விகளுக்கு தமிழக வெற்றிக் கழகம் (TVK) தரப்பில் எந்தப் பதிலும் இல்லை என்பதால் விஜய்க்கு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது.

Next Story