உள்ளாட்சிகள் தினத்தினை முன்னிட்டு கிராம சபை கூட்டம்

உள்ளாட்சிகள் தினத்தினை முன்னிட்டு கிராம சபை கூட்டம்

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர்

உள்ளாட்சிகள் தினத்தினை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடத்தப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் 01.11.2023 உள்ளாட்சிகள் தினம் அன்று ஊராட்சி மன்ற தலைவர்களால் கிராம சபை கூட்டம் நடைபெறும் என இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது. இக்கூட்டத்தில் நவம்பர் 1 ஆம் நாளினை தமிழகத்தின் உள்ளாட்சிகள் தினமாகக் கொண்டாடப்படும் என அறிவிப்பு செய்த மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு நன்றி தெரிவித்தல், கொரோனா பெருந்தொற்று காலம் முதல் தற்போது முடிவடைந்த ‘நம்ம ஊரு சூப்பரு' இயக்கத்தில் கிராம ஊராட்சியில் சிறப்பாக பணிபுரிந்த ஊழியர்களை சிறப்பித்தல், கிராம ஊராட்சியில் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கும் மகளிர் சுயஉதவிக் குழுக்களை கௌரவித்தல், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்,மற்றும் ஊராட்சியில் உள்ள பொதுமக்கள், எளிதாக வரி செலுத்துதல் மற்றும் இரசீது பெறுதல் போன்றவற்றை இணையம் வழி பெறலாம் என்கிற விவரங்கள் கிராம சபையில் வைக்கப்படவுள்ளது. எனவே பொதுமக்கள் அனைவரும் பெருமளவில் பங்கேற்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் சி.பழனி அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story