நீரை கண்டு ஓடுவதும் தேடுவதுமே சென்னை மக்களின் நிலை! -வினோஜ் பி.செல்வம் பளிச் பேட்டி .
தேர்தல் பிரச்சாரம்
நாடாளுமன்ற தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெறுகிறது. இதற்காக தற்போது அரசியல் கட்சிகள் தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில்,மத்திய சென்னை தொகுதி பாஜக வேட்பாளர் வினோஜ் பி.செல்வத்துக்கு ஆதரவாக அக்கட்சியின் மகளிர் அணி தேசிய தலைவி வானதி சீனிவாசன், தேனாம்பேட்டை பகுதியில் நேற்று வாக்கு சேகரித்தார்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வினோஜ் பி.செல்வம்,ஏப்ரல் 9ஆம் தேதி மத்திய சென்னைக்கு வருகை தரும் இந்தியாவின் தலைசிறந்த தலைவர் பிரதமர் நரேந்திர மோடியை அன்புடன் வரவேற்கிறேன் என்றார் .திராவிட கட்சிகளை கடுமையாக விமர்சித்து வரும் வினோஜ் பி.செல்வம்,மத்திய சென்னை தொகுதியில் பாஜக வெற்றி பெற்றால்,திமுகவின் குடும்ப அரசியலுக்கு முடிவு கட்டப்படும், மகளிர் உரிமை தொகை 60 சதவீத மக்களுக்கு திமுக வழங்கவில்லை, முக்கியமாக கடந்த மழை வெள்ளத்தில் மக்கள் அனுபவித்த துயரத்தை சென்னை மக்கள் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பரில் நீரை கண்டு ஓடுவதும் கோடையில் நீரை தேடி அலைவதுமே வாடிக்கையாகி போனது .இந்த நிலை மாற வேண்டும் .அதற்கு மாறன் போதும் மாற்றம் வேண்டும் என திமுகவை கடுமையாக விமர்சித்து பிரசாரம் செய்தார்.இவருக்கு ஆதரவாக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, தமாகா தலைவர் ஜி.கே.வாசன், பாமக தலைவர் அன்புமணி உள்ளிட்டோர் பிரச்சாரம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது .