உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில் நலத்திட்ட உதவிகள்

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திமுக சார்பில் மருத்துவர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடைபெற்றது
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, மத்தூர் தெற்கு ஒன்றியம்,சாமல்பட்டி ஊராட்சியில் கழக இளைஞரணி செயலாளர் மற்றும் இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழாவை முன்னியிட்டு, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட மருத்துவ அணி சார்பாக சாமல்பட்டி அரசு மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது . இவ்விழாவில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும், பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான மதியழகன்.,MLA கலந்து கொண்டு மருத்துவ உபகரணங்களை வழங்கி சிறப்புறையாற்றினார். உடன் மாநில, மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், துணை தலைவர்கள், சார்பு அணி நிா்வாகிகள் திமுக மூத்த முன்னோடிகள், திமுக தோழர்கள் என அனைவரும் கலந்துக் கொண்டு சிறப்பித்தார்கள்...

Tags

Next Story