இதற்கு ஏன் சரியான பதில் கூற மறுக்கிறார் அண்ணாமலை - துரை வைகோ

இதற்கு ஏன் சரியான பதில் கூற மறுக்கிறார் அண்ணாமலை - துரை வைகோ

துரை வைகோ

மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ திண்டுக்கல்லில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: இந்தியாவில் லஞ்ச லாவண்யத்தை ஒழிப்பதற்கு துவங்கப்பட்டது தான் அமலாக்கத்துறை. ரூ.3 கோடி லஞ்சம் கேட்டு கைதான அமலாக்கத்துறை அதிகாரி கைது செய்யப்பட்டது இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

அமலாக்கத்துறை, வருமான வரித்துறையைப் பயன்படுத்தி இந்தியா கூட்டணியில் உள்ள எதிர்க்கட்சியை பழிவாங்கும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டு வருகின்றது என இந்தியா கூட்டணியில் இருக்கக்கூடிய எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்

தற்போது அமலாக்கத்துறை அதிகாரி லஞ்சம் வாங்கி கைது செய்யப்பட்ட சம்பவம் எதிர்க்கட்சிகள் சொன்ன குற்றச்சாட்டை நிரூபிக்கும் வகையில் உள்ளது. பாஜக ஆளுகின்ற மாநிலத்தில் உள்ள அரசியல்வாதிகள் தொழிலதிபர்கள் ஊழல் செய்யவில்லையா? அங்கு ஏன் இது போன்ற அமலாக்கத்துறை சோதனைகள் நடைபெறவில்லை.

தமிழக அரசு அதிகாரிகள் செய்கின்ற குற்றச்சாட்டுக்கு தமிழக அரசை குற்றம் சாட்டுவது நல்லதா?. தமிழக அரசை குற்றம் சாட்டும் அண்ணாமலை அமலாக்கத்துறை அதிகாரி லஞ்சம் வாங்கியதற்கு மட்டும் ஏன் சரியான பதில் கூற மறுக்கிறார். என்றார்.

Tags

Next Story