கடவூர் அருகே சாலை விபத்து: தாய், மகள் காயம்
கரூர் மாவட்டம், கடவூர் தாலுக்கா, மஞ்சநாயக்கனூர் அருகே உள்ள தெற்கு மாணிக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ரத்தினம் மகன் காமராஜ் வயது 40. இவரது தாயார் அஞ்சலை அம்மாள் வயது 61. இவரது மகள் கோபிகா வயது 15. இவர்கள் மூன்று பேரும்,
மார்ச் 20 ஆம் தேதி மாலை 6:30 மணி அளவில், ஈசநத்தத்திலிருந்து கரூர் செல்லும் சாலையில் இவர்களுக்கு சொந்தமான டூவீலரில் சென்று கொண்டிருந்தனர். டூவீலரை காமராஜர் ஓட்ட, அந்த வாகனத்தில் அவரது தாயார் அஞ்சலையம்மாள், மகள் கோபிகா ஆகியோர் பின்னால் அமர்ந்து சென்றனர். இவர்கள் சென்ற வாகனம் ஆவுத்திபாளையம் பகுதியில் வசிக்கும் ராமச்சந்திரன் வீட்டின் முன்பு சென்றபோது,
டூவீலரை வேகமாக இயக்கியதால், வாகனம் கட்டுப்பாட்டை இழந்து, கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மூன்று பேரும் படுகாயம் அடைந்ததால், மூன்று பேரையும் மீட்டு, தனியார் ஆம்புலன்ஸ் மூலம், கரூரில் உள்ள அக்க்ஷயா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக கோபிகா அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், டூவீலரை கவனக்குறைவாகவும், வேகமாகவும் ஓட்டி விபத்து ஏற்பட காரணமான காமராஜ் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் வெள்ளியணை காவல்துறையினர்.