தமிழகம் போகிப் பண்டிகையையொட்டி சென்னையில் புகைமூட்டமாக உள்ளதால் விமான சேவைகள் பாதிப்பு

Fog

Fog

Air services are affected due to smog in Chennai on the occasion of Tamil Nadu Bogib festival

போகியை முன்னிட்டு சென்னையில் வீடுகள் முன்பு பழைய பொருட்களை எரித்து மக்கள் கொண்டாடினர். பெரியவர்களும் சிறுவர்களும் வீட்டின் முன்பு முரசு கொட்டி பழைய பொருட்களை தீயிட்டு எரித்தனர். இதன் காரணமாக சென்னையில் காற்று மாசு அதிகரித்துள்ளது. அதிகாலை நேரத்தில் கடும் புகை மூட்டம் காரணமாக வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர். எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு புகை மூட்டம் நிலவுவதால் முகப்பு விளக்கை எரியவிட்டபடி வாகனங்கள் செல்கின்றன.இதனை அடுத்து சென்னையில் பனி மூட்டத்துடன், புகைமூட்டமாக உள்ளதால் விமான சேவைகள் பாதிக்கபட்டுள்ளது. கடும் புகையால் சென்னை விமான நிலையத்தில் விமானங்களின் வருகை, புறப்பாடு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

Tags

Next Story