மேட்டுப்பாளையம் – ஊட்டி மலை ரயில் சேவை இன்றும், நாளையும் ரத்து!!

X
nilgiri mountain train
நீலகிரி மாவட்டத்தில் கனமழை காரணமாக ஏற்பட்ட மண்சரிகாரணமாக மேட்டுப்பாளையம் -ஊட்டி மலை ரயில் சேவை இன்றும், நாளையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. முன்பதிவு செய்த பயணிகளுக்கு முழுகட்டணமும் திருப்பி வழங்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. நீலகிரியில் பெய்து வரும் கனமழை மற்றும் தண்டவாளத்தில் ஏற்பட்ட மண் சரிவு மற்றும் உருண்டு விழுந்த பாறை உள்ளிட்டவற்றால் இன்றும், நாளையும் மேட்டுபாளையம் – ஊட்டி ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
