இனப்பெருக்கத்தை தடுக்க நடவடிக்கை ஜூலையில் தெருநாய்கள் கணக்கெடுப்பு: சென்னை மாநகராட்சி

இனப்பெருக்கத்தை தடுக்க நடவடிக்கை ஜூலையில் தெருநாய்கள் கணக்கெடுப்பு: சென்னை மாநகராட்சி

Dog

சென்னை மாநகராட்சியில் ஜூலை மாதத்தில் தெருநாய்கள் கணக்கெடுப்பு பணி தொடங்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னை மாநகராட்சியில் உள்ள தெருநாய்கள் குறித்த விபரங்கள், மூன்றாண்டுகள் இடைவெளியில் கணக்கெடுக்கப்பட்டு வந்தன. அப்போது தெருநாய்களை பிடித்து, கருத்தடை மற்றும் ஒட்டுண்ணி நீக்கும் தடுப்பூசிகள் உள்ளிட்டவை செலுத்தப்பட்டன. கடைசியாக, கடந்த 2018ம் ஆண்டு அக்டோபர் மாதம், தெருநாய்கள் கணக்கெடுப்பு பணி நடந்தது. அப்போது, 1 லட்சம் தெருநாய்கள் வரை இருப்பது உறுதி செய்யப்பட்டு, அவற்றிற்கு கருத்தடை, தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.

Read MoreRead Less
Next Story