நிபா வைரஸ் பரவல் குறித்து தமிழகத்தில் பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவை இல்லை: பொது சுகாதாரத்துறை

X
nipah virus
தமிழகத்தில் நிபா வைரஸ் பரவல் குறித்து அச்சம் கொள்ள தேவை இல்லை என பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் கேரளாவில் நிபா வைரஸ் பரவ தொடங்கி உள்ளது. இதனை தொடர்ந்து தமிழ்நாட்டில் நிபா வைரஸ் பரவுவதைத் தடுக்க கேரள மாநில எல்லையோர மாவட்டங்களான நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி, கன்னியாகுமரி சுழற்சி அடிப்படையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட, அனைத்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கும் தமிழக பொதுச் சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் உத்தரவிட்டுள்ளார்.
Next Story
