கள்ளச்சாராய விற்பனை தொடர்பாக பதிவு செய்த வழக்குகளின் விவரங்களை மாவட்ட வாரியாக தாக்கல் செய்ய ஆணை!!
மதுரை
கள்ளச்சாராய விற்பனை தொடர்பாக பதிவு செய்த வழக்குகளின் விவரங்களை மாவட்ட வாரியாக தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட் கிளை ஆணையிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி விஷச்சாராய பலி வழக்கை சிபிஐ-க்கு மாற்றக் கோரிய வழக்கில் காவல்துறைக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு அளித்துள்ளது. சிகிச்சைக்கு பலர் அனுமதிக்கப்பட்ட நிலையில், மருத்துவமனை சார்பில் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதா. எதன் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சஸ்பெண்ட் உத்தரவு ரத்து செய்யப்பட்டது என்று ஐகோர்ட் கேள்வி கேட்டுள்ளது.
Next Story