செந்தில் பாலாஜியை பிணையில் விடுவிக்க உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு வரவேற்பு: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி

செந்தில் பாலாஜியை பிணையில் விடுவிக்க உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு வரவேற்பு: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி

mutharasan

செந்தில் பாலாஜியை பிணையில் விடுவிக்க உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தேர்தல் ஆணையம், புலனாய்வுத்துறை, அமலாக்கத்துறை, நீதிமன்றங்கள் உள்ளிட்ட இந்த அமைப்புகளை முடக்கி பாஜக அரசு தனதாக்கிக் கொண்டது. எனவேதான் பிணையில் கூட வெளிவர முடியாமல் அமைச்சராக இருந்த அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இப்போதாவது பிணை கிடைத்திருப்பது ஆறுதல் அளிக்கிறது. பிணையில் விடுவிக்க உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story