நீர்நிலை ஆக்கிரமிப்புகள் சோழர் காலத்தில் இருந்தாலும் அவை அகற்றப்பட வேண்டும்: உயர்நீதிமன்றம்
நீர்நிலை ஆக்கிரமிப்புகள் சோழர் காலத்தில் இருந்தாலும் அவை அகற்றப்பட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. திருவேற்காட்டில் உள்ள கோலடி ஏரியை ஆக்கிரமித்து குடியிருப்புகள் கட்டப்பட்டதாக செய்தி வெளியாகி இருந்தது. நாளிதழ் செய்தி அடிப்படையில் தாமாக முன்வந்து சென்னை உயர்நீதிமன்றம் விசாரணை நடத்தியது. 162 ஏக்கரில் இருந்த கோலடி ஏரி தற்போது 112 ஏக்கராக சுருங்கிவிட்டது என நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர். உரிய பட்டாக்களுடன் மக்கள் வீடுகளை கட்டி வாழ்ந்து வருவதாகவும் அவர்களை கருத்துகளை கேட்கவும் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த நிலையில் நீர்நிலை ஆக்கிரமிப்பு தொடர்பாக இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய ஆணையிட்ட நிலையில், வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவுவதற்காக மூத்த வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரத்தை நியமித்தது ஐகோர்ட் உத்தரவிட்டது.