புதுக்கோட்டையில் மலர் சந்தை மற்றும் ஏலக்கடையில் பூக்கள் விலை உயர்வு!!
பூக்கள் விலை உயர்வு
புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள மலர் சந்தை மற்றும் ஏலக்கடையில் பூக்கள் விலை உயர்ந்துள்ளது. பூக்களின் வரத்து குறைந்துள்ளதால் விலை சற்று அதிகரித்து உள்ளது. ரூ.150-க்கு விற்கப்பட்ட சம்பங்கி ரூ.250-க்கும், ரூ.1,000-க்கு விற்கப்பட்ட மல்லிகைப் பூ ரூ.1,500 க்கும் விற்பனை. ரூ.800-க்கு விற்பனையான முல்லை ரூ.1,000-க்கும், ரூ.700-க்கு விற்கப்பட்ட கரட்டான் ரூ.800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Next Story