இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்களை மீட்க தொடர்ந்து நடவடிக்கை : மு.க.ஸ்டாலின்
முதல்வர் மு.க.ஸ்டாலின்
இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்களை மீட்க தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் இலங்கை கடற்படையால் கைதான மீனவர்களை விடுவிக்க தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறோம். டெல்லிக்கு செல்லும்போது பிரதமரை சந்தித்து மீனவர்கள் சிறைபிடிப்பு தொடர்பாக பேசி வருகிறேன். தொடர்ந்து ஒன்றிய அரசுக்கு கடிதங்கள் எழுதியதை அடுத்து மீனவர்களை படிப்படியாக விடுவிக்கின்றனர். வெளியுறவுத்துறையும் அவ்வப்போது முயற்சி எடுத்து மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது. வெளியுறவுத்துறை நடவடிக்கை எடுத்து வந்தாலும் மீனவர் பிரச்சனை தொடர்கிறது. மீனவர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
Next Story