ஒன்றிய குழுவை உடனடியாக அனுப்ப மீண்டும் கோரிக்கை வைத்துள்ளேன்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
stalin
ஒன்றிய குழுவை உடனடியாக அனுப்ப பிரதமர் மோடியிடம் மீண்டும் கோரிக்கை வைத்துள்ளேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பேரிடர் பாதிப்பை மாநில அரசு திறம்பட எதிர்கொண்டு வருவது குறித்து பிரதமரிடம் தெரிவித்தேன். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டு வருவதையும் பிரதமரிடம் கூறினேன். ஒன்றிய குழுவை உடனடியாக அனுப்ப பிரதமர் மோடியிடம் மீண்டும் கோரிக்கை வைத்துள்ளேன். தமிழ்நாட்டின் கோரிக்கையை பிரதமர் மோடி பரிசீலித்து நடவடிக்கைகளை மேற்கொள்வார் என உறுதிபட நம்புகிறேன் என தெரிவித்தார்.
Next Story