தென்காசி, தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட்!!

தென்காசி, தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட்!!

Red alert 

தென்காசி, தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 21 செ.மீ.க்கு மேல் மிக மிக பலத்த மழை பெய்யும் என்பதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்று மிக பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது. ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, கரூர், திண்டுக்கல், திருப்பூர், கோவை மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

Next Story