எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான மனு தள்ளுபடி!!
Edapadi Palanisamy
எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதிமுக பொதுச்செயலாளராக பழனிசாமியை அங்கீகரித்ததை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததை மறுபரிசீலனை செய்ய உத்தரவிடக் கோரி அதிமுக உறுப்பினர்கள் ராம்குமார் ஆதித்தன், கே.சி.சுரேன் பழனிசாமி ஆகியோர் ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. விளம்பரத்துக்காக தொடரப்பட்ட வழக்கு என கூறி தள்ளுபடி செய்து நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், குமரப்பன் உத்தரவிட்டுள்ளார்.
Next Story