ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!!
CM Stalin
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் கடிதம் எழுதியுள்ளார். எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 17 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. கடந்த டிச.20-ல் இலங்கையைச் சேர்ந்த அடையாளம் தெரியாத 6 பேர் நாகை மீனவர்களை தாக்கியுள்ளனர். இரண்டு நாட்டுப் படகுகளில் பயணித்த 6 மீனவர்களில் 3 மீனவர்கள் காயம் அடைந்துள்ளனர். மீன்பிடி படகுகளில் இருந்து ஜிபிஎஸ் கருவிகள், வலைகள், கையடக்க தொலைபேசிகளையும் கொள்ளையடித்துள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Next Story