சார்-பதிவாளருக்கு முன்ஜாமின் வழங்க ஐகோர்ட் மறுப்பு!!
Chennai Highcourt
கோவில் சொத்தை உறவினருக்கு பதிவு செய்ய அனுமதித்த சார் பதிவாளருக்கு முன்ஜாமின் வழங்க ஐகோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது. ஆஞ்சநேயர் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை போலி ஆவணம் மூலம், ஜெயசந்திரன் என்பவர் பத்திரப்பதிவு செய்துள்ளார். பத்திரப்பதிவுக்கு உடந்தையாக இருந்ததாக சேலம் சார் பதிவாளர் செந்தாமரை, ஜெயசந்திரன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. சார்-பதிவாளர் செந்தாமரை முன் ஜாமின் கோரி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார். வேண்டுமென்ற பத்திர பதிவு செய்ய அனுமதி வழங்கி உள்ளதாகக் கூறி, சார் பதிவாளரின் முன் ஜாமின் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.
Next Story