ஏற்றத்தாழ்வுகளை நீக்கி சமத்துவத்தை நிலைநாட்ட உருவான இயக்கம்தான் நமது இயக்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
CM Stalin
ஏற்றத்தாழ்வுகளை நீக்கி சமத்துவத்தை நிலைநாட்ட உருவான இயக்கம்தான் நமது இயக்கம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றி வருகிறார். சென்னை சைதாப்பேட்டையில் திறன் மேம்பாட்டு மையத்தை திறந்து வைத்து முதலமைச்சர் பேசி வருகிறார். புத்தாண்டு பிறந்து நான் கலந்துகொள்ளும் முதல் நிகழ்ச்சி இது, மிகவும் மகிழ்ச்சி. பெண்கள் உரிமை, முன்னேற்றத்துக்காக ஏராளமான திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தி வருகிறது. அரசு பணிகளில் மகளிருக்கு இடஒதுக்கீடு, மகளிர் சுயஉதவிக் குழுக்கள், சொத்துகளில் பெண்களுக்கு சமஉரிமை அளித்தது திமுக அரசு. திமுகவின் கொள்கைகளில் பாலின சமத்துவம் மிக முக்கியமானது. பெண்களின் உயர்கல்வியை உறுதிசெய்யும் வகையில் நாம் திட்டங்களை தீட்டி வருகிறோம். விடியல் பயணம், புதுமைப்பெண் உள்ளிட்ட பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம் என தெரிவித்தார்.
Next Story