திருமாவளவன் மீதான வழக்கை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்!!
thirumavalavan
விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் தலைவர் திருமாவளவன் மீது இந்து பெண்கள் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக கடந்த 2020-ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் இன்று ரத்து செய்துள்ளது. இந்து பெண்கள் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டது. மனுஸ்மிருதியில் பெண்கள் எவ்வாறு சித்தரிக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்தே பேசியதாக உயர்நீதிமன்றத்தில் திருமாவளவன் விளக்கம் அளித்திருந்தார். மேலும், பெண்களை இழிவுபடுத்தும் வகையில் எந்த ஒரு வார்த்தையும் தாமாக கூறவில்லை எனக் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார். மனுதாரருக்கு வெறுப்புணர்வை ஏற்படுத்தும் எந்த நோக்கமுல் இல்லை எனத் தெரிவித்த நீதிபதி வேல்முருகன் வழக்கு ரத்து செய்து உத்தரவிட்டார்.
Next Story