வார இறுதி நாளில் குறைந்த தங்கம் விலை!!

வார இறுதி நாளில் குறைந்த தங்கம் விலை!!

gold

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை வார தொடக்க நாளான திங்கட்கிழமை சவரனுக்கு ரூ.120, செவ்வாய்கிழமை சவரனுக்கு ரூ.320 குறைந்தும், ஆங்கில புத்தாண்டு நாளான புதன்கிழமை சவரனுக்கு ரூ.320 உயர்ந்தும், வியாழக்கிழமை சவரனுக்கு ரூ.240 உயர்ந்தும், நேற்று சவரனுக்கு ரு.640 உயர்ந்து சவரன் ரூ.58,080-க்கு விற்பனையானது. கடந்த 3நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1200 வரை உயர்ந்து விற்பனையானது. இந்த நிலையில், வார இறுதி நாளான இன்று தங்கம் விலை குறைந்துள்ளது. சவரனுக்கு ரூ.360 குறைந்து ஒரு சவரன் ரூ.57,720-க்கும் கிராமுக்கு 45 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.7,215-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 99 ரூபாய்க்கும், கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் குறைந்து பார் வெள்ளி ரூ.99ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Next Story