அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வழக்கு; உத்தரவை மாற்ற முடியாது: உயர்நீதிமன்றம்

அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வழக்கு; உத்தரவை மாற்ற முடியாது: உயர்நீதிமன்றம்

Rajenthra Bhalaji

அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வழக்கில் உத்தரவை மாற்ற முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மோசடி வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க பிறப்பித்த உத்தரவை மாற்றியமைக்க முடியாது என ஐகோர்ட் தெரிவித்துள்ளது. காவல் துறை தரப்பு முறையீட்டிற்கு சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாகக் கூறி பணம் பெற்று மோசடி செய்ததாக வழக்கு தொடரப்பட்டது. விரைந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் உத்தரவை நிறைவேற்றாததால் சிபிஐக்கு மாற்றம் செய்யப்பட்டது. ராஜேந்திர பாலாஜி வழக்கை சிபிஐக்கு மாற்றி உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருந்தது.

Next Story