இஸ்ரோவின் புதிய தலைவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த நாராயணனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!!

X
ISRO Narayanan and CM Stalin
இஸ்ரோவின் புதிய தலைவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த நாராயணனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். தற்போது இஸ்ரோ தலைவராக உள்ள சோமநாத்தின் பதவிக்காலம் ஜன.14ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, இஸ்ரோவின் புதிய தலைவராக வி.நாராயணனை நியமித்து ஒன்றிய அரசு உத்தரவிட்டது. திருவனந்தபுரத்தில் உள்ள வலியமலாவில் உள்ள திரவ உந்து அமைப்பு மைய இயக்குனராக நாராயணன் பணியாற்றி வருகிறார். இஸ்ரோவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள வி.நாராயணன் 2 வருடங்கள் அந்த பதவியில் இருப்பார்.இந்த நிலையில், இஸ்ரோவின் புதிய தலைவரான தமிழ்நாட்டைச் சேர்ந்த நாராயணனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Next Story
