சீமானுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம்!!
Anbumani
"பெரியாரை கொள்கை ரீதியாக விமர்சிக்கலாம். மாறாக அவர் மீது அவதூறு பரப்புவதை அனுமதிக்க முடியாது” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், சீமானுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், “தந்தைப் பெரியாரின் புகழ் வெளிச்சத்தை அவதூறால் மறைக்க முடியாது!தந்தைப் பெரியாரின் பெயருக்கும், புகழுக்கும் களங்கம் கற்பிக்கும் வகையில், அவரைப் பற்றி அடிப்படை இல்லாத அவதூறுகள் பரப்பப்படுவது கடுமையாக கண்டிக்கத்தக்கது. பெரியாரை சிறுமைப்படுத்தும் எந்த செயலையும் பாமக அனுமதிக்காது” இவ்வாறு தெரிவித்தார்.
Next Story