இந்தியாவின் மருத்துவத் தலைநகராக தமிழ்நாடு இருக்க திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களே காரணம் :முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

X
CM Stalin
சென்னையில் மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அதில் பேசிய அவர், ” மக்களின் உயிர்காக்கக்கூடிய உன்னத சேவை செய்வதற்கான பணி ஆணைகளை வழங்கியதில் மகிழ்ச்சி அடைகிறேன். எப்படிப்பட்ட நெருக்கடிகள் வந்தாலும் சரி; அதையெல்லாம் எதிர்கொண்டு தன் பணியை மேற்கொண்டு வருகிறது திராவிட மாடல் அரசு. இந்தியாவின் மருத்துவத் தலைநகராக தமிழ்நாடு இருக்க திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களே காரணம். உலகமே பாராட்டும் வகையில் தமிழகத்தில் மருத்துவக் கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டுள்ளன,”இவ்வாறு தெரிவித்தார்.
Next Story
