வெள்ளியங்கிரி மலையேறும் பக்தர்களுக்கு கட்டுப்பாடு!!

X
Velliangiri
கோவை வெள்ளியங்கிரி மலையேறும் பக்தர்களுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வனத்துறை வெளியிட்டுள்ளது. மலையில் பழைய துணிகளை வீசுவது, அனுமதியின்றி மரக்கன்றுகளை நடுவது உள்ளிட்ட வீடியோ வைரலானதை அடுத்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மலையேறும் பக்தர்கள் அனுமதித்த பாதையில் மட்டுமே செல்ல வேண்டும்; அனுமதியின்றி மரக்கன்றுகளை நடக் கூடாது. பிளாஸ்டிக் பொருட்கள், எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்களை பக்தர்கள் எடுத்துச் செல்லக் கூடாது. வெள்ளியங்கிரி 6வது மலையில் ஈரத்துணிகளை அங்கேயே போட்டுவிட்டு செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
Next Story