இலங்கை சென்ற பிரதமர் மோடி மீனவர் பிரச்சனை பற்றி பேசவில்லை: அமைச்சர் ரகுபதி

X
minister raghupathi
இலங்கை சென்ற பிரதமர் மோடி மீனவர் பிரச்சனை பற்றி பேசவில்லை என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். இலங்கை கடற்படையால் கடந்த காலத்தில் 3684 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் 613 படகுகள் சிறைபிடிப்பு. இலங்கை சிறையில் வாடும் எஞ்சிய மீனவர்களை விடுதலை செய்வது தொடர்பாக எந்த தகவலும் இல்லை. மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக ரூ.576 கோடிக்கு நலத்திட்டங்களை முதல்வர் அறிவித்தார். சேதமடைந்த படகுகளுக்கு நிதியுதவி அளித்துள்ள மாநிலம் தமிழ்நாடுதான் என்றும் தெரிவித்தார்.
Next Story