நியோ மேக்ஸ் மோசடி.. நிலத்தை பிரித்துத் தர குழு அமைக்க ஐகோர்ட் கிளை உத்தரவு!!

X
மதுரை
நியோமேக்ஸ் நிறுவன முதலீட்டாளர்களுக்கு வழங்கப்பட்ட ஜாமின், முன் ஜாமினை ரத்து செய்யக் கோரிய வழக்கு விசாரணையில், முதலீட்டாளர்களுக்கு நிலத்தை பிரித்துத் தர அதிகாரிகள் அடங்கிய குழு விரைவில் அமைக்கப்படும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி தெரிவித்துள்ளார். மேலும், மாவட்ட வருவாய் அலுவலர், பதிவுத்துறை, நகர திட்டமிடல் இயக்குநரக அதிகாரி அடங்கிய குழு அமைக்கப்படும். மனுதாரர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பின் ஆலோசனைகளை பதில் மனுவாக தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டுள்ளார். முதலீட்டு பணம் விரைவில் திரும்ப கிடைக்கும் வகையில் அமைக்கப்படும் குழு செயல்படும் என ஐகோர்ட் மதுரை கிளை தெரிவித்துள்ளது.
Next Story